Testwiki:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 30, 2014: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
imported>Kanags
No edit summary
 
(வேறுபாடு ஏதுமில்லை)

08:08, 31 மார்ச் 2014 இல் கடைசித் திருத்தம்

தொண்டைக் கட்டு அல்லது குரல்வளை, மூச்சுக்குழாய் அழற்சி என்பது சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒரு மருத்துவ நிலைமையாகும். இதன்போது தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல் போன்ற சுவாசப்பாதையின் மேல் பகுதிகளில் அழற்சி ஏற்படுகின்றது. இது சுவாசப்பாதையில், தீவிரமாக இருக்கும் தீநுண்ம நோய்த்தொற்றினாலேயே வழக்கமாக தூண்டப்படுகின்றது. இந்தத் தொற்றானது தொண்டையின் உள்ளாக வீக்கத்தை ஏற்படுத்தி, இயல்பான சுவாசத்திற்கு இடையூறு செய்து “குரைத்தல்” போன்ற இருமல், மிகைமூச்சொலி, மற்றும் கீச்சுக்குரல் போன்ற நிலைகளை ஏற்படுத்துகிறது. இது மிதமான, நடுத்தரமான அல்லது கடுமையான அறிகுறிகளை உண்டாக்கலாம். இவை பெரும்பாலும் இரவில் மோசமாகலாம். பெரும்பாலும் வாய்வழி உட்கொள்ளும் தெரோயிட்டு மருந்தை ஒரு தடவை அளிப்பதன் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. கடுமையான நிகழ்வுகளில் எப்போதாகிலும் எப்பினஃப்ரீன் மூச்சிழுத்தல் மூலம் உள்ளெடுக்கப்படல் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் சேர்ப்பித்தல் அரிதாகவே இருக்கும். மேலும்


கணிதத்தில் ஆய்லரின் வாய்ப்பாடு முக்கோணவியல் சார்புகளுக்கும் மெய்ப்புனை (சிக்கலெண்) அடுக்குறிச் சார்புக்கும் இடையிலான தொடர்பைத் தருகிறது. கணிதவியலாளர் ஆய்லரின் பெயரால் இவ் வாய்ப்பாடு அழைக்கப்படுகிறது.  x என்ற ஏதேனுமொரு மெய்யெண்ணுக்கு,

eix=cosx+isinx 

இங்கு கணித மாறிலி e , இயல்மடக்கையின் அடிமானம்; i கற்பனை அலகு; cos மற்றும் sin இரண்டும், x (ரேடியன்களில்) கோணத்தின் முக்கோணவியல் சார்புகள்.

cosx+isinx  என்பதை cisx  எனச் சுருக்கி,
eix=cisx  எனவும் இவ் வாய்ப்பாடு எழுதப்படுகிறது

x ஒரு சிக்கலெண்ணாக இருந்தாலும் இவ் வாய்ப்பாடு பொருந்தும். இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபெயின்மான் இவ் வாய்ப்பாட்டை "கணிதத்தின் மிக முக்கியமான வாய்ப்பாடு" என அழைத்தார். மேலும்...