கார்ல் பொப்பர்
வார்ப்புரு:Infobox philosopher
சேர் கார்ல் ரைமண்ட் பொப்பர் (Sir Karl Raimund Popper, 28 சூலை 1902 – 17 செப்டம்பர் 1994) என்பவர் ஆஸ்திரிய-பிரித்தானிய[1] மெய்யியலாளரும், இலண்டன் பொருளியல் பள்ளி பேராசிரியரும் ஆவார். இவர் பொதுவாக 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் மெய்யியலாளர்களுள் ஒருவர் எனப் போற்றப்படுகிறார்.[2][3] கலை வரலாறு முதல் மருத்துவம் வரையான சமூக, இயற்கை அறிவியல் துறைகள் அனைத்திலும் பொப்பரின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது.
பிரான்சிஸ் பேக்கன் என்பவரால் தொடங்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த அறிவியல் முறையை நிராகரித்த கார்ல் பொப்பர், அதற்குப் பதிலாக பொய்ப்பித்தற் கோட்பாடு என்ற புதியதொரு அறிவியல் முறையை முன்வைத்தார்.[4] அறிவியலாளர் ஒருவர் அறிவியல் கொள்கையை நிறுவ வேண்டும் என முயலாமல், அதற்கு மாற்றாக ஏற்கனவே முன்மொழியப்பட்ட அறிவியல் கொள்கைகளைப் பொய்ப்பிக்கவே முயல வேண்டும் என பொப்பர் கூறினார். மார்க்சியம் ஒரு பொய்ப்பிக்கமுடியாக் கொள்கை எனக் கூறப்படுவதால் மார்க்சியம் அறிவியல் கொள்கை அல்ல எனக் கூறி அதனை நிராகரித்தார்.[4] அரசியலில் தாராண்மை மக்களாட்சி, சமூகவியல் திறனாய்வுக் கொள்கைகளை ஆதரித்தார். இவை "திறந்த சமூகத்திற்கு" இட்டுச் செல்லும் எனக் குறிப்பிட்டார்.[5]
வாழ்க்கைக் குறிப்பு
கார்ல் பொப்பர் வியன்னாவில் (அன்றைய ஆஸ்திரிய அங்கேரியில்) 1902 ஆம் ஆண்டில் உயர் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இவரது பெற்றோரின் பெற்றோர்கள் அனைவரும் யூத இனத்தவர். ஆனாலும், கார்ல் பிறப்பதற்கு முன்னரே இவரது குடும்பத்தினர் லூதரனியத்தைத் தழுவிக் கொண்டனர்.[6][7] கார்லின் தந்தை சைமன் பொப்பர் ஒரு வழக்கறிஞரும், வியென்னா பல்கலைக்கழக முனைவரும் ஆவார். தாய் ஜெனி சிலேசிய-அங்கேரியர்.[6][8] தந்தை ஒரு நூல் விரும்பியாக இருந்தார். 12,000–14,000 நூல்களை அவர் சேகரித்து வைத்திருந்தார்.[9] அவை அனைத்தையும் கார்ல் பொப்பர் முதுசொமாகப் பெற்றுக் கொண்டார்.[10]
தனது 16வது அகவையில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, வியென்னா பல்கலைக்கழகத்தில் விருந்தினர் மாணவராக சேர்ந்து கணிதம், இயற்பியல், மெய்யியல், உளவியல், இசையின் வரலாறு போன்ற பாடங்களைப் படித்தார். 1919 இல் மார்க்சிய சிந்தனையால் கவரப்பட்டு பள்ளி மாணவர்களின் சோசலிசக் கழகத்தில் சேர்ந்தார். அத்துடன், அக்காலத்தில் மார்க்சியக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்ட ஆஸ்திரிய சமூக சனநாயக தொழிலாளர் கட்சியிலும் சேர்ந்து இயங்கினார்.[11] 1919 சூன் 15 இல் ஒன்றில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆயுதமில்லா கட்சித் தோழர்கள் எட்டுப் பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வைக் கண்ணுற்ற கார்ல் பொப்பர், கார்ல் மார்க்சின் அறிவியல்-நோக்கற்ற வரலாற்றுப் பொருள்முதலியம் ஒரு மாயை எனக் கண்டு, மார்க்சியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். பின்னர் அவர் சமூக தாராண்மைவாதத்தின் ஆதரவாளராக தனது வாழ்நாள் முழுவதும் இருந்து வந்தார்.
சிறிது காலம் வீதியோரக் கட்டட வேலைகளில் பணியாற்றிய போதிலும், தனது கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் ஆல்பிரட் ஆட்லர் என்ற சிறுவர்களுக்கான உளவியல் நிபுணரின் மருத்துவமனையில் பணியாற்றினார். இறுதியில், 1922 ஆம் ஆண்டில் வியென்னா பல்கலைக்கழகத்தில் சாதாரண மாணவராக சேர்து, 1924 ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பல்கலைக்கழகக் கல்வியை முடித்தார். 1925 இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரில் சேர்ந்து, மெய்யியல், உளவியல் பாடங்களைக் கற்றார். இக்காலப்பகுதியில், ஜோசப்பீன் என்னிங்கர் என்பவரை சந்திக்க நேர்ந்தது. இவரையே பொப்பர் 1930 ஆம் ஆண்டில் திருமணம் முடித்தார்.
1928 இல் பொப்பர் கார்ல் பூலர் என்பவரின் மேற்பார்வையின் கீழ் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[12] 1929 இல் தொடக்கப்பள்ளி ஒன்றில் கணிதத்திலும், இயற்பியலிலும் ஆசிரியரானார். 1934 ஆம் ஆண்டில் அறிவியல் கண்டுபிடிப்பின் தருக்கம் (The Logic of Scientific Discovery), என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் அவர், அறிவியலையும் அறிவியலல்லாதவற்றையும் வேறுபடுத்தும் தனது பொய்ப்பித்தற் கோட்பாட்டை முன்வைத்தார். 1935, 1936 ஆம் ஆண்டுகளில் தனது படிப்பின் நிமித்தம் இங்கிலாந்து சென்று திரும்பினார்.
கல்விப் பணி
பொப்பர் 1937 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். கிறைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள கான்டர்பரி பல்கலைக்கழகத்தில் மெய்யியல் விரிவுரையாளர் ஆனார். இங்கிருந்தே அவர் "திறந்த சமூகமும் அதன் எதிரிகளும்" (The Open Society and its Enemies) என்ற தனது புகழ்பெற்ற ஆக்கத்தை எழுதினார். 1946 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்ததை அடுத்து, இங்கிலாந்து திரும்பி, இலண்டன் பொருளியல் பள்ளியில் ஏரணம், அறிவியல் முறை ஆகியவற்றில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். மூன்று ஆண்டுகளின் பின்னர் 1949 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். 1958 முதல் 59 வரை அரிஸ்டோட்டலியன் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார். 1969 இல் பல்கலைக்கழக ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 1985 ஆம் ஆண்டில் மனைவியுடன் ஆஸ்திரியா திரும்பினார். அதே ஆண்டில் மனைவி இறந்தார். 1986 ஆம் ஆண்டில் மீண்டும் ஐக்கிய இராச்சியம் திரும்பினார்.[13]

கார்ல் பொப்பர் 1994 செப்டம்பர் 17 இல் தனது 92வது அகவையில் புற்றுநோய், நுரையீரல் அழற்சி, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டுக் காலமானார்.[14] இறப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் வரை அவர் தனது மெய்யியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.[15] இலண்டனிலேயே அவரது உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் மட்டும் வியென்னாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரது மனைவியின் அடக்கத்தலத்தின் பக்கத்திலேயே புதைக்கப்பட்டது.[16] கார்ல் பொப்பருக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவரது சொத்துகள் அவரது செயலாளரால் பராமரிக்கப்பட்டது. பொப்பரின் கையெழுத்துப்படிகள் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஊவர் கல்விநிலையத்திற்கு வழங்கப்பட்டன. அவர் சேகரித்து வைத்திருந்த நூல்கள் ஆத்திரியாவின் கிளாகன்புர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டன. ஏனையவை அனைத்தும் கார்ல் பொப்பர் அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டன.[17]
பொப்பரின் மெய்யியல் கோட்பாடுகள்
பின்னணி
கார்ல் பொப்பர் ஒரு காலத்தில் சோசலிசக் கொள்கைகளில் நம்பிக்கையுடைவராய் இருந்தார். 1919களில் அவர் தன்னை ஒரு பொதுவுடமைவாதியாகவே கருதினார். இக்காலத்தில் அவர் பொருளியலில் மார்க்சியக் கருத்துகள், வர்க்கப் போர், மற்றும் வரலாறு ஆகியவற்றை அறிந்திருந்தார்.[18] விரைவிலேயே மார்க்சியக் கொள்கை ஒரு மாயை என அவர் உணர ஆரம்பித்தார். புரட்சிக்காக இரத்தம் சிந்துவது அவசியம் என்ற கொள்கையாளர்களுடன் அவர் விலகி நிற்க முயன்றார்.
1920களிலும், 30களிலும் ஆஸ்திரியாவில் பாசிசம் தலைதூக்குவதை சனநாயகவாதிகளால் தடுக்க இயலாமல் போனதால் பொப்பர் பெரும் மனக்கவலைக்குள்ளானார். செருமன் ரெய்க் ஆத்திரியாவை இணைத்துக் கொண்டதை அடுத்து, பொப்பர் நிரந்தரமாக புலம்பெயர முடிவெடுத்தார். சமூக அறிவியலில் பொப்பரின் முக்கியமான ஆக்கங்களான "வரலாற்று நியதிவாதத்தின் வறுமை" (The Poverty of Historicism, 1944), "திறந்த சமூகமும் அதன் எதிரிகளும்" (The Open Society and Its Enemies, 1945) ஆகியவை மத்திய ஐரோப்பிய நாடுகளில் அக்காலப்பகுதியில் நிலவிய ஒருகட்சி ஆட்சிகளின் தாக்கங்களினால் எழுதப்பட்டவை ஆகும். இந்த நூல்கள் சமூக, மற்றும் அரசியல் தத்துவத்தில் சனநாயகத் தாராண்மைவாதத்தை ஆதரிப்பவையாக எழுதப்பட்டன.[18]
உளவியலில் சிக்மண்ட் பிராய்ட் முன்வைத்த உளநிலைப் பகுப்பாய்வுக் கொள்கை அறிவியல் தன்மையைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறி பொப்பர் அதனை நிராகரித்தார். பிராய்ட் என்ற மருத்துவர் தமது நோயாளிகள் பலரின் உளநோயைத் தீர்க்கும் வகையில் தனது பகுப்பாய்வுக் கொள்கையை உருவாக்கினார். தனது கொள்கைக்கு சாதகமான தரவுகளைத் திரட்டுவதிலேயே அவர் ஈடுபட்டார், தனது கொள்கை ஏன் பொய்யாக இருக்கக்கூடாது என அவர் சிந்திக்கவில்லை என பொப்பர் கருதினார். இதன் மூலம் உளநிலைப் பகுப்பாய்வுக் கொள்கைகளின் பலம் எனக் கொள்ளப்பட்டவைகள் உண்மையில் அதன் பலவீனங்களே என்றார் பொப்பர்.[18] 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இயற்பியலில் சார்புக் கோட்பாட்டை உருவாக்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஒளி விலகல் குறித்த கோட்பாடு நிரூபிக்க முடியாமல் போகலாம் எனக் கருதினார். இதனால், ஐன்ஸ்டைனை அறிவியல் மனப்பான்மைமையுடைய ஒரு சிந்தனையாளர் என பொப்பர் கூறினார். ஐன்ஸ்டைனின் கோட்பாடு 1919 இல் ஆர்தர் எடிங்டன் என்பவரால் உண்மையென நிரூபிக்கப்பட்டது.[18] எந்தவொரு அறிவியல் கொள்கையும் முற்றிலுமாக சரியென நிறுவலாம் எனக் கருதுவது தவறு என்றும், தவறுகளைக் களைவதன் மூலமே அறிவியல் வளரும் என்ற முடிவுக்கு பொப்பர் வருகின்றார்.[19]
அறிவியல் தத்துவம்
பொய்ப்பித்தல் கோட்பாடு/பகுப்புக் கோட்டுப் பிரச்சினை
அறிவியல் கொள்கை ஒன்றை நிறுவுவதற்கு எத்தனை பரிசோதனைச் சான்றுகள் கொடுக்கப்பட்டாலும், அதனைத் தருக்க ரீதியாகப் பொய்யெனக் கூறுவதற்கு ஏற்புடைய சான்று ஒன்றே ஒன்று போதுமானது. இதனால் அறிவியல் கொள்கையை நிறுவுவதற்குப் பதிலாக நிராகரிக்கவே முயல வேண்டும் என பொப்பர் கூறினார். "பொய்யாக்கற் கோட்பாடு" (falsifiable) என்பது ஒரு கொள்கை தவறு என நிறுவுவதல்ல, ஆனால், அது தவறு என்றால் அது நோக்கல் மூலமோ அல்லது பரிசோதனை மூலமோ நிறுவப்பட வேண்டும்.[20] இதன் மூலம் அவர் அறிவியலையும் அறிவியலல்லாதவற்றையும் வேறுபடுத்த பகுப்புக்கோடு (demarcaton) ஒன்றை வரையறுக்கிறார். எந்த ஒரு அறிவியல் கொள்கையும் பொய்ப்பிக்க முடியாது என்றால் அது அறிவியல் கொள்கை அல்ல என்ற முடிவுக்கு பொப்பர் வருகிறார். இம்முடிவின் மூலம் உளநிலைப் பகுப்பாய்வும், மார்க்சியமும் பொய்ப்பிக்கமுடியாத கொள்கைகள் எனக் கூறப்படுவதால், அவை அறிவியல் கொள்கைகள் அல்லவெனப் பொப்பர் கூறினார். அதுபோன்றே வரலாறும் அறிவியலற்றது என்ற நிலைப்பாட்டை பொப்பர் கொண்டிருந்தார்.[4]
குவாண்டம் விசையியல் பற்றிய கோப்பனேகன் விளக்கத்துக்கு எதிராக பொப்பர் நிறைய எழுதியுள்ளார். நீல்சு போர் முன்வைத்த "பயனுடைவாதம்" (instrumentalism) குறித்தும் தனது எதிர்ப்பைப் பதிந்த பொப்பர், அண்டம் பற்றிய ஐன்ஸ்டைனின் நடப்பியல் அணுகுமுறை சரியானதென வாதிட்டார். பொப்பரின் பொய்ப்பித்தற் கோட்பாடு 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சார்ல்சு பியேர்சு என்பவரின் வழுவாய்ப்புவாதத்தை (fallibilism) ஒத்திருந்தது. பியேர்சின் ஆக்கங்களைத் தாம் முன்னரேயே அறிந்திருந்தால் அது தனக்கு நன்மையாக இருந்திருக்கும் என பொப்பர் தனது Of Clocks and Clouds (1966) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
பொப்பர் "வாழ்வு முழுவதும் புதிர் விடுவித்தல்" (All Life is Problem Solving) என்ற தனது நூலில், அறிவுக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதாவது, கால மாற்றத்தில் அண்டம் பற்றிய நமது அறிவு காலத்துடன் எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதை அவர் இக்கொள்கை மூலம் விளக்கினார். அறியாமையில் இருந்து அறிவை நோக்கிய நமது பயணம் பிரச்சினை ஒன்றைத் தீர்க்கும் வகையில் அமைகின்றது என அவர் வாதாடினார். கொள்கை ஒன்று உண்மையானது என்பதை அறிவியல் சோதனை முறையில் நான் நிரூபிக்க முடியாது, பதிலாக அக்கொள்கை பொய்யென நிரூபிக்க முயல வேண்டும். அறிவின் முன்னேற்றம் என்பது, பொப்பரின் கோட்பாட்டின் படி, ஒரு பரிணாம வளர்ச்சி ஆகும். இது படிவளர்ச்சிக் கொள்கையில் இயற்கைத் தேர்வு முறை பின்பற்றும் அறிவியல் முறையை ஒத்தது. தனது அறிவுக் கொள்கையை அவர் பின்வரும் சமன்பாட்டின் மூலம் விளக்குகிறார்:
அறிதலுக்கான முயற்சி எப்போதும் ஒரு பிரச்சினை, , உடன் ஆரம்பமாகிறது. இதற்காக முன்மொழியப்பட்ட தீர்வு முயற்சியை குறிக்கின்றது. முன்மொழியப்பட்ட தீர்வில் காணப்படும் தவறுகளைக் களைதலை குறிக்கின்றது. என்பது தவறுகள் களையப்பட்டதன் பின்னர் உள்ள நிலையைக் குறிக்கிறது. அதே வேளையில், புதிய பிரச்சினை ஒன்றின் தொடக்கத்தையும் காட்டுகிறது. இவ்வாறு,
எனப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக அறிவு உண்மையை நோக்கி வளர்ச்சியடைந்து செல்கின்றது.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Karl Popper on Stanford Encyclopedia of Philosophy
- Popper, K. R. “Natural Selection and the Emergence of Mind”, 1977.
- The Karl Popper Web வார்ப்புரு:Webarchive
- University of Canterbury (NZ) வார்ப்புரு:Webarchive brief biography of Popper
- Karl Popper Clips (1974)
- ↑ Watkins, J. Obituary of Karl Popper, 1902–1994. Proceedings of the British Academy, 94, pp. 645–684
- ↑ See Stephen Thornton, "Karl Popper", in The Stanford Encyclopedia of Philosophy (Summer 2009 Edition), Edward N. Zalta (ed.)
- ↑ Horgan, J. (1992) Profile: Karl R. Popper – The Intellectual Warrior, சயன்டிஃபிக் அமெரிக்கன் 267(5), 38–44.
- ↑ 4.0 4.1 4.2 4.3 வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ 6.0 6.1 Malachi Haim Hacohen. Karl Popper – The Formative Years, 1902–1945: Politics and Philosophy in Interwar Vienna. Cambridge: Cambridge University Press, 2001. pp. 10 & 23, வார்ப்புரு:ISBN
- ↑ மெகீ, பிறையன். The Story of Philosophy. New York: DK Publishing, 2001. ப. 221, வார்ப்புரு:ISBN
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ Raphael, F. The Great Philosophers London: Phoenix, p. 447, வார்ப்புரு:ISBN
- ↑ Manfred Lube: Karl R. Popper – Die Bibliothek des Philosophen als Spiegel seines Lebens. Imprimatur. Ein Jahrbuch für Bücherfreunde. Neue Folge Band 18 (2003), S. 207–238, வார்ப்புரு:ISBN.
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Cite doi
- ↑ வார்ப்புரு:Cite news
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Find a Grave
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ 18.0 18.1 18.2 18.3 வார்ப்புரு:Cite web
- ↑ Adolf Grünbaum, 'Is Falsifiability the Touchstone of Scientific Rationality?' (1976), and 'The Degeneration of Popper's Theory of Demarcation' (1989), both in his Collected Works (edited by Thomas Kupka), vol. I, New York: Oxford University Press 2013, ch. 1 (pp. 9–42) & ch. 2 (43–61)
- ↑ "Bias-Free Research" Dialogue Talk.