வீச்சுப் பண்பேற்றம்

testwiki இலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 14:33, 16 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
இடது பகுதி: பண்பேற்ற சமிக்கை. வலது பகுதி: வீச்சு மட்டிசைப்பின் காவி மூலமான அதிவெண் கற்றை

வீச்சுப் பண்பேற்றம் அல்லது வீச்சு மட்டிசைப்பு (Amplitude modulation)(AM) என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது சாதாரண அலைகளை கலந்து இலகுவாக நீண்ட தூரம் கொண்டுசெல்லும் முறைகளில் ஒன்றாகும். வீச்சுப் பண்பேற்றத்திலோ வீச்சு மாறக்கூடியது; அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகளைக் கொண்டு செல்வதில் வீச்சுப் பண்பேற்றம் பயன்படுகின்றது.[1]

Animation of audio, AM and FM sine waves
உரு1: ஒலிச் சமிக்கை ஒன்று (மேல்) வீச்சுப் பண்பேற்றம் அல்லது அதிர்வெண் பண்பேற்றம் மூலம் காவப்படுவதிக் காட்டும் அலை

நியம AM அலை குறித்த கணிப்பு முறை

அதிர்வெண் fc ஐயும் வீச்சம் A ஐயும் கொண்ட காவி அலை (sine அலை) ஒன்றைக் கருதுக. அது பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்.

c(t)=Asin(2πfct).

m(t) பண்பேற்றம் பெற்ற அலைவடிவம். இவ் எடுத்துக்காட்டுக்கு சைன் அலை கொண்ட அதிர்வெண் fmபண்பேற்றத்தையும், அது அதை விட மிகச்சிறிய அதிர்வெண் fc எடுத்தால்:

m(t)=Mcos(2πfmt+ϕ),

இங்கு M மட்டிசைப்பின் வீச்சம். M<1 ஆக இருப்பின் (1+m(t)) எப்போதும் நேர்ப் பெறுமானத்தைக் கொள்ளும். எனவே வீச்சுப் பண்பேற்றம் என்பது காவி அலை c(t) ஐ நேர்க் கணியமாயுள்ள (1+m(t)) உடன் பெருக்குவதால் கிடைக்கும்:

y(t) =[1+m(t)]c(t)
=[1+Mcos(2πfmt+ϕ)]Asin(2πfct)

மேற்கோள்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=வீச்சுப்_பண்பேற்றம்&oldid=1047" இலிருந்து மீள்விக்கப்பட்டது