இருசமபக்க முக்கோணத் தேற்றம்

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 17:21, 23 ஏப்ரல் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:சமதள வடிவவியல் தேற்றங்கள்; added Category:பல்கோணிகள் பற்றிய தேற்றங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பர்னின் (Byrne) பதிப்பில் வெளியான எலிமெண்ட்சில் பான்சு அசினொரம்-யூக்ளிடின் நிறுவலின் ஒரு பகுதி

இருசமபக்க முக்கோணத் தேற்றத்தின்படி (isosceles triangle theorem), ஒரு இருசமபக்க முக்கோணத்தின் இரண்டு சமபக்கங்களின் எதிர்க் கோணங்களிரண்டும் சமமாக இருக்கும்”. யூக்ளிடின் எலிமெண்ட்சில் புத்தகம் 1 இல் கூற்று 5 ஆக தரப்பட்டுள்ள இம்முடிவு பான்சு அசினோரம் (pons asinorum) என அழைக்கப்படுகிறது.

இத்தேற்றத்தின் மறுதலையும் உண்மையாகும். அதாவது, ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் சமமாக இருந்தால், அம்முக்கோணம் இருசமபக்க முக்கோணமாகும் (அக்கோணங்களுக்கு எதிரேயுள்ள இரு பக்கங்களின் நீளங்களும் சமமாக இருக்கும்).

நிறுவல்

பொதுவாகப் பாடப்புத்தகங்களில் தரப்படும் இத்தேற்றத்தின் நிறுவல் கீழே தரப்பட்டுள்ளது. இந்த நிறுவல் முறையில் இருசமபக்க முக்கோணத்தின் சமபக்கங்களுக்கு இடைப்பட்ட உச்சிக்கோணத்தின் இருசமவெட்டி வரைந்து கொள்ளப்படுகிறது.[1] யூக்ளிட் அளித்த நிறுவலைவிட இது எளிதானதாக இருப்பினும், யூக்ளிடின் கூற்றுகளில் ஒன்பதாகவுள்ள கோண இருசமவெட்டியைக் கொண்டு அதற்கு முன்னுள்ள ஐந்தாவது கூற்று நிறுவப்படுகிறது.

பாடப்புத்தகங்களில் காணப்படும் நிறுவல்

ABC ஒரு இருசமபக்க முக்கோணம், AB=AC. BACகோணத்தின் இருசமவெட்டி வரைய அது முக்கோணத்தின் பக்கம் BCX இல் சந்திக்கிறது.

BAX,CAX ஆகிய இரு முக்கோணங்களில்:

  • AB=AC
  • AX பொதுப்பக்கம்
  • BAX=CAX

எனவே பக்கம்-கோணம்-பக்கம் விதிப்படி BAX=CAX

இரு முக்கோணங்கள் சர்வசமம் எனில் அவற்றின் ஒத்த பக்கங்களும் கோணங்களும் சமமானவை என்பதால் B=C

X புள்ளியை பக்கம் BC இன் நடுப்புள்ளியாகக் கொண்டு இத்தேற்றமானது பிரெஞ்சு கணிதவியலாளர் லெஜெண்டிரால் நிறுவப்பட்டுள்ளது.[2] அந்நிறுவலில், BAX,CAX சர்வசமம் என நிறுவ பக்கம்-பக்கம்-பக்கம் எடுகோள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

  1. For example J.M. Wilson Elementary geometry (1878 Oxford) p. 20
  2. A. M. Legendre Éléments de géométrie (1876 Libr. de Firmin-Didot et Cie) p. 14