கடிகாரக் கோணக் கணக்குகள்

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 02:45, 15 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
2:20 நேரத்தைக் காட்டும்போது கடிகாரத்தின் மணி முள்ளுக்கும் நிமிட முள்ளுக்கும் இடைப்பட்ட கோணம்.

கடிகாரக் கோணக் கணக்குகள் (Clock angle problems) ஒரு கடிகாரத்தின் முட்களுக்கிடைப்பட்ட கோணங்களின் அளவுகளைக் காணும் வழிமுறையைத் தருகின்றன.

முட்களின் கோணம் காணல்

கடிகாரக் கோணக் கணக்குகளில் கோணம், நேரம் என்ற இரு வெவ்வேறு அளவுகள் தொடர்புபடுத்தப்படுகின்றன. கோணமானது, கடிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ள 12 என்ற எண்ணிலிருந்து கடிகார திசையில், பாகையில் அளக்கப்படுகிறது. நேரமானது, வழக்கமான 12-மணிக் கடிகார அமைப்பை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

இதில் கோணத்தின் மாறுவீதம் பாகை/நிமிடம் அலகில் அளக்கப்படுகிறது. ஒரு வழக்கமான 12-மணிக் கடிகாரத்தின் மணிகாட்டும் முள்ளானது 12 மணிநேரத்தில் (720 நிமிடங்கள்) 360° கோணவளவு நகர்கிறது. அதாவது நிமிடத்திற்கு 0.5°. இதேபோல நிமிடமுள்ளானது 60 நிமிடங்களில் 360° கோணவளவு நகர்கிறது. அதாவது நிமிடத்திற்கு 6°.[1]

மணிமுள்ளின் கோணம் காணும் சமன்பாடு

θhr=12MΣ=12(60H+M)

இதில்:

  • θ -எண் 12 இலிருந்து மணிமுள் நகரும் கோணவளவு (கடிகார திசையில், பாகையில் அளக்கப்பட்டது)
  • H -மணித்தியாலம்
  • M குறிப்பிட்ட மணித்தியாலம் கடந்த பின்னரான நிமிடங்கள்.
  • MΣ 12 மணி கடந்த பின்னான நிமிடங்கள்.

நிமிட முள்ளின் கோணம் காணும் சமன்பாடு

θmin.=6M

இதில்:

  • θ -கடிகாரத்தில் எண் 12 இலிருந்து நிமிடமுள் நகரும் கோணவளவு (கடிகார திசையில், பாகையில் அளக்கப்பட்டது)
  • M நிமிடம்.

எடுத்துக்காட்டு

கடிகாரம் காட்டும் நேரம் 5:24 எனில்,

கோண முள்ளின் கோணம் (பாகையில்):

θhr=12(60×5+24)=162

நிமிட முள்ளின் கோணம் (பாகையில்):

θmin.=6×24=144

முட்களுக்கிடைப்பட்ட கோணம் காணும் சமன்பாடு

இரு முட்களுக்கிடைப்பட்ட கோணத்தைப் பின்வரும் வாய்ப்பாட்டின் மூலம் காணலாம்:

Δθ=|θhrθmin.|=|12(60H+M)6M|=|12(60H11M)|

இவ்வாய்ப்பாட்டில்,

  • H என்பது மணித்தியாலத்தையும்,
  • M நிமிடத்தையும் குறிக்கும்.

எடுத்துக்காட்டு

கடிகாரம் காட்டும் நேரம் 2:20 எனில் இரு முட்களுக்கு இடைப்பட்ட கோணம்:

Δθ=|12(60×211×20)|=|12(120220)|=50

இரு முட்களும் ஒன்றின்மேல் ஒன்றாக வருதல்

இரு முட்களின் கோணங்களும் சமமாக இருக்கும்போது இரண்டும் ஒன்றின்மேல் மற்றொன்று மேற்கவியும்.

θhr=θmin.12(60H+M)=6M11M=60HM=6011HM=5.45H

H இன் மதிப்புகள் 0–11 வீச்சிலமையும் முழு எண்கள். எனவே H=1,2,3,....11 வரைப் பதிலிடக் கிடைக்கும் நேரங்கள்:

0:00, 1:05.வார்ப்புரு:Overline, 2:10.வார்ப்புரு:Overline, 3:16.வார்ப்புரு:Overline, .... (0.வார்ப்புரு:Overline நிமிடங்கள் என்பது 27.வார்ப்புரு:Overline நொடிகள் ஆகும்.)

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளியிணைப்புகள்