சுற்று (வடிவவியல்)

சுற்று (turn) என்பது கோணத்தின் அளவைக் குறிக்கப் பயன்படும் ஒரு அலகு. ஒரு சுற்றின் அளவு 2[[பை (கணித மாறிலி)|வார்ப்புரு:Pi]] ரேடியன்கள், 360° அல்லது 400 கிரேடியன். இது சுழற்சி, முழுச்சுற்று, முழுவட்டம் என்ற சொற்களாலும் குறிக்கப்படுகிறது. அரைச்சுற்று, காற்சுற்று, செண்டிச்சுற்று, மில்லிச்சுற்று, இரும கோணம், புள்ளி என, பல்வேறு சிறு அலகுகளாக ஒரு சுற்றானது பிரிக்கப்பட்டுள்ளது.
உட்பிரிவுகள்
- செண்டிச்சுற்று
ஒரு சுற்றுக் கோண அளவை 100 சமபாகங்களாகப் பிரித்தால், அந்நூறு சமபிரிவுகளில் ஒன்றின் அளவு ஒரு செண்டிச்சுற்று (centiturn) எனப்படும்.
அதாவது,
1 செண்டிச்சுற்று = 1/100 சுற்று
- (அல்லது)
100 செண்டிச்சுற்றுகள் = 1 சுற்று.
செண்டிச்சுற்றுகளாப் பிரிக்கப்பட்ட பாகைமானியானது சதவீதப் பாகைமானியென அழைக்கப்படும். 1922 ஆம் ஆண்டிலிருந்து இவ்வகையான பாகைமானிகள் பயன்பாட்டில் இருந்து வந்தாலும்,[1] பின்வரும் காலத்தில்தான் பிரட் ஹோயிலால் (Fred Hoyle) செண்டிச்சுற்றுகள், மில்லிச்சுற்றுகள் என்ற பெயர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[2]
- மில்லிச்சுற்று
ஒரு சுற்றுக் கோண அளவை 1000 சமபாகங்களாகப் பிரித்தால், அந்த ஆயிரம் சமபிரிவுகளில் ஒன்றின் அளவு ஒரு மில்லிச்சுற்று (milliturn) எனப்படும்.
அதாவது,
1 மில்லிச்சுற்று = 1/1000 சுற்று
- (அல்லது)
1000 மில்லிச்சுற்றுகள் = 1 சுற்று.
ஒரு மில்லிச்சுற்றானது பாகைகளில் 0.36° அல்லது 21'36" அளவுக்குச் சமம்.
- அரைச்சுற்று
180° ( ரேடியன்)அளவு சுழற்சி அரைச்சுற்று ஆகும்.,[3]
இரு பரிமாணத்தில் ஒரு புள்ளியைப் பொறுத்த எதிரொளிப்பும் அரைச்சுற்றும் சமமான விளவுகளைக் கொண்டிருக்கும்.
- காற்சுற்று
90° ( ரேடியன்) அளவு சுழற்சி காற்சுற்று ஆகும்.
- பிற
- கடற்பயணத்தில் பயன்படுத்தப்படும் திசைகாட்டும் கருவியில் ஒரு சுற்றானது 32 சமபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
- இரும ரேடியன் என்பது 1/256 சுற்று ஆகும்.[4]
கணித மாறிலிகள்

ஒரு சுற்றின் அளவானது வார்ப்புரு:Nowrap (≈6.283185307179586)[5] ரேடியன்களுக்குச் சமம்.
| சுற்றுகள் | ரேடியன்கள் | பாகைகள் | கிரேடியன்கள் |
|---|---|---|---|
| 0 | 0 | 0° | 0g |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Sfrac | 15° | வார்ப்புரு:Sfracg |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Sfrac | 30° | வார்ப்புரு:Sfracg |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Sfrac | 36° | 40g |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Sfrac | 45° | 50g |
| வார்ப்புரு:Sfrac | 1 | ca. 57.3° | ca. 63.7g |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Sfrac | 60° | வார்ப்புரு:Sfracg |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Sfrac | 72° | 80g |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Sfrac | 90° | 100g |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Sfrac | 120° | வார்ப்புரு:Sfracg |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Sfrac | 144° | 160g |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Pi | 180° | 200g |
| வார்ப்புரு:Sfrac | வார்ப்புரு:Sfrac | 270° | 300g |
| 1 | 2வார்ப்புரு:Pi | 360° | 400g |
முன்மொழிவு

க்குப் பதில் ஒரு சுற்றுக்குச் சமமான ரேடியனை அடிப்படை வட்ட மாறிலியாகக் கொள்ளலாம் என்ற கருத்தை 2001 ஆம் ஆண்டு கணிதவியலாளர் இராபர்ட் பலாலிசு (Robert Palais) முன்வைத்தார். மேலும் குறியீட்டையும் ( இன் வடிவில் மூன்று கால்கள் கொண்ட வடிவம்) அதற்கானதாகப் பரிந்துரைத்தார்.[6]
2010 இல் கணிதவியலாளர் மைக்கேல் கார்ட்டில் (Michael Hartl), கிரேக்க எழுத்தான ஐப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்காக அவர் அளித்த காரணங்கள் இரண்டு[7]:
முதலாவதாக, ஒரு சுற்றுக்குச் சமமான ரேடியனை எனக் கொள்ளும்போது ஒரு சுற்றின் பின்னங்களை எளிதாகக் குறிக்க முடியும்.
ஒரு சுற்றின் பங்கை, அதாவது ஐ எனக் குறிக்கலாம்.
இரண்டாவதாக இன் தோற்றம் வார்ப்புரு:Pi இன் தோற்றத்தை ஒத்துள்ளது. கார்ட்டிலின் முன்மொழிவில் க்குப் பதிலாக பயன்படுத்துவதால் எளிமையடையும் வாய்ப்பாடுகளையும் எடுத்துக்காட்டுகளாகத் தந்துள்ளார்.[8][9][10]
பயன்பாடு
- மின்காந்தச் சுருளி, சுழலும் பொருட்கள் போன்ற பெரியகோணங்களைக் கொண்டவற்றில் சுற்றானது கோணத்தின் அலகாக பயனுள்ளதாக அமைகிறது.
- சுழலும் இயந்திரங்களின் கோண வேகம் ஒரு நிமிடத்தில் நிகழும் சுழற்சியின் எண்ணிக்கையில் அளக்கப்படுகிறது (RPM).
- ஒரு பல்கோணியின் வெளிக்கோணங்களின் கூடுதல் ஒரு முழுச்சுற்றாகும்.
- வட்ட விளக்கப்படங்களில் ஒரு தரவின் பகுதிகளைக் காட்டுவதற்கு சுற்றுகளின் பின்னங்கள் பயன்படுத்தப்படுகிறது. இவ்விளக்கப் படத்தில் தரவின் ஒவ்வொரு சதவீதமும் ஒரு செண்டிச்சுற்றுக் கோணத்திற்குச் சமமாகக் கொள்ளப்படுகிறது.
மேற்கோள்களும் குறிப்புகளும்
- ↑ Croxton, F. E. (1922), A Percentage Protractor Journal of the American Statistical Association, Vol. 18, pp. 108-109
- ↑ Hoyle, F., Astronomy. London, 1962
- ↑ Half Turn, Reflection in Point cut-the-knot.org
- ↑ ooPIC Programmer's Guide வார்ப்புரு:Webarchive www.oopic.com
- ↑ Sequence வார்ப்புரு:OEIS2C.
- ↑ Palais, R. 2001: Pi is Wrong, The Mathematical Intelligencer. Springer-Verlag New York. Volume 23, Number 3, pp. 7–8
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ வார்ப்புரு:Citation
- ↑ வார்ப்புரு:Citation
- ↑ வார்ப்புரு:Cite news