கோபால்ட்(II,III) ஆக்சைடு

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 23:47, 29 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox கோபால்ட்(II,III) ஆக்சைடு (Cobalt(II,III) oxide) என்பது Co3O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். நன்கு வரையறுக்கப்பட்ட இரண்டு கோபால்ட் ஆக்சைடுகளின் ஒரு வடிவமாக இது விளங்குகிறது. கருப்பு நிறத்துடன் எதிர் இரும்புக்காந்தப் பண்புடன் திண்மமாக கோபால்ட்(II,III) ஆக்சைடு காணப்படுகிறது. கலப்பு இணைதிறன் பெற்ற இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு சில சமயங்களில் CoIICoIII2O4 என்றும் சிலசமயங்களில் CoO•Co2O3 என்றும் எழுதப்படுகிறது.[1]

அமைப்பு

ஆக்சைடு அயனிகளின் கனசதுர நெருக்கப் பொதிவு கட்டமைப்பின் , நான்முக இடைவெளிகளில் Co2+ அயனிகளும் , எண்முக இடைவெளிகளில் Co3+ அயனிகளும் கொண்டுள்ள சாதாரண சிபினல் கட்டமைப்பை Co3O4 ஏற்றுள்ளது.[1]

Co(II) இன் நான்முக ஒருங்கிணைப்பு வடிவியல் Co(III) இன் உருத்திரிந்த எண்முக
ஒருங்கிணைப்பு வடிவியல்
ஆக்சிசனின் உருத்திரிந்த
நான்முக ஒருங்கிணைப்பு வடிவியல்

தொகுப்பு முறைத் தயாரிப்பு

கோபால்ட்(II) ஆக்சைடு 600 முதல் 700 0 செல்சியசு[2] வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும் போது Co3O4 சேர்மமாக மாறுகிறது. 900 0 செல்சியசு வெப்பநிலைக்கு மேல் கோபால்ட்(II) ஆக்சைடு நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. இவ்வினையின் சமநிலை வினை இங்குத் தரப்பட்டுள்ளது.

2 Co3O4 6 CoO + O2

ஆய்வு

இச்சேர்மத்தைப் பயன்படுத்தி செயற்கை முறையில் ஒளிச்சேர்க்கை செயல்முறை நிகழ்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாதுகாப்பு

கோபால்ட் சேர்மங்கள் அளவு அதிகாகும் போது நிலைத்த நச்சாகின்றன.[3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:கோபால்ட் சேர்மங்கள் வார்ப்புரு:ஆக்சிசன் சேர்மங்கள் வார்ப்புரு:ஆக்சைடுகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=கோபால்ட்(II,III)_ஆக்சைடு&oldid=1116" இலிருந்து மீள்விக்கப்பட்டது