கந்தக நாற்குளோரைடு
கந்தக நாற்குளோரைடு (Sulfur tetrachloride) என்பது SCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் வெளிர் மஞ்சள் நிறத்துடன் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் நிலைப்புத் தன்மையற்று காணப்படுகிறது. 242 கெல்வின் வெப்பநிலைக்கு மேல் கந்தக நாற்குளோரைடு சிதைவடைந்து கந்தக இருகுளோரைடு மற்றும் குளோரினாக மாறுகிறது. கந்தக இருகுளோரைடு மற்றும் குளோரினை 193 கெல்வின் வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் கந்தக நாற்குளோரைடு உருவாகிறது.
கந்தக நாற்குளோரைடின் திண்ம அமைப்பு தொடர்பான உறுதியான கருத்துகள் ஏதுமில்லை. அனேகமாக SCl3+Cl− என்ற அயனிகளால் உருவான உப்பாக இது இருக்கலாம். ஏனெனில் இதனுடன் தொடர்புடைய உப்புகள் அறியப்பட்டுள்ளன.[1]
பண்புகள்
கந்தக நாற்குளோரைடு −30 °செல்சியசு வெப்பநிலைக்குக் கீழ் திண்மநிலையில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. வெப்பநிலை உயர்ந்தால் இச்சேர்மம் சிதைவடைந்து கந்தகம் மற்றும் குளோரினாக மாறுகிறது. திண்மநிலையில் இறுதியாக தூளாக்கப்பட்டபின் இது வெண்மைநிற பொருளாகக் காணப்படுகிறது. சிதைவடையும் அதேநேரத்தில் −20 ° செல்சியசு வெப்பநிலையில் இது உருகத் தொடங்குகிறது[2]. தண்ணீருடன் வினைபுரிந்து நீராற்பகுப்பு மூலமாக ஐதரசன் குளோரைடு மற்றும் கந்தக டை ஆக்சைடு ஆகியனவற்றைக் கொடுக்கிறது[3].
வாயுநிலை கந்தக நாற்குளோரைடானது சாய்ந்தாடி மூலக்கூற்று வடிவமைப்பைக் கொண்டுள்ளதாக நுண்ணலை நிறமாலையியல் ஆய்வும் எலக்ட்ரான் விளிம்பு வளைவு ஆய்வும் தெரிவிக்கின்றன[4]. திரவநிலையில் இது நிலையற்ற முக்கோண இரட்டைப்பட்டைக் கூம்பு வடிவமைப்பையும் வெளிப்படுத்துகிறது[4].
வினைகள்
- சிதைவடைதல்:
- காற்றில் நீருடன் வினை:
- நீருடன் சேர்த்து சூடுபடுத்தும் போது:
- நைட்ரிக் அமிலத்துடன் ஆக்சிசனேற்ற வினை:
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Greenwood&Earnshaw2nd
- ↑ Georg Brauer: Handbuch der Präparativen Anorganischen Chemie. வார்ப்புரு:De icon
- ↑ Holleman-Wiberg, Lehrbuch der Anorganischen Chemie, 101. Auflage, de Gruyter Verlag 1995 வார்ப்புரு:ISBN வார்ப்புரு:De icon
- ↑ 4.0 4.1 Goettel, J. T., Kostiuk, N. and Gerken, M. (2013), The Solid-State Structure of SF4: The Final Piece of the Puzzle . Angew. Chem. Int. Ed., 52: 8037–8040. வார்ப்புரு:Doi
- ↑ Справочник химика / Редкол.: Никольский Б.П. и др.. — 3-е изд., испр. — Л.: Химия, 1971. — Т. 2. — 1168 с. வார்ப்புரு:Ru icon
- ↑ Химическая энциклопедия / Редкол.: Кнунянц И.Л. и др.. — М.: Советская энциклопедия, 1995. — Т. 4. — 639 с. — வார்ப்புரு:ISBN வார்ப்புரு:Ru icon
- ↑ Лидин Р.А. и др. Химические свойства неорганических веществ: Учеб. пособие для вузов. — 3-е изд., испр. — М.: Химия, 2000. — 480 с. — வார்ப்புரு:ISBN வார்ப்புரு:Ru icon