குளிர்விக்கும் திறன்
குளிர்விக்கும் திறன் (Cooling capacity) என்பது ஒரு குளிர்விக்கும் அமைப்பினுடைய வெப்பத்தை [1] வெளியேற்றும் திறனைக் குறிக்கிறது. வாட்டுகள் என்பது இத்திறனை அளப்பதற்கான அனைத்துலக அலகு முறை அலகாகும். டன் அல்லது டன்கள் என்பது பொதுவாக வழக்கத்தில் உள்ள அலகாகும். கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில், கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலையில் எவ்வளவு தண்ணீரை உறைய வைக்கமுடியும் என்பதை டன் அல்லது டன்கள் என்ற அலகில் குறிப்பிடுவர்[2]. ஒரு குளிரூட்டியின் 1 டன் குளிரூட்டல் என்பது 2000 பவுண்ட்நிறை தண்ணீரை 0°செ வெப்பநிலையில் 24 மணி நேரத்தில் உறையவைக்கும் அளவாகும். இது 211 கிலோயூல்/நிமிடத்திற்குச் சமமானதாகும்[3].
குளிர்விக்கும் திறனின் அடிப்படையான அனைத்துலக அலகு முறையை வருவிப்பதற்குரிய சமன்பாடு இங்கு தரப்படுகிறது.
இச்சமன்பாட்டில்,
- என்பது குளிர்விக்கும் திறன் [kW]
- என்பது நிறை விகிதம் [kg/s]
- என்பது வெப்பக் கொண்மை [kJ/kg K]
- என்பது வெப்பநிலை மாற்றம் [K]