ஜாலியின் தராசு

ஜாலியின் தராசு (வார்ப்புரு:Lang-en) என்பது ஒரு சாதாரண வில் தராசு ஆகும். இதனைப் பயன்படுத்தி சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம்.[1]
இங்கு ஒரு கம்பிச்சுருளின் மேல்பகுதி ஒரு நிறுத்துகையின் (Stand) துணையடன் செங்குத்தாகத் தொங்கவிடப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அடிப்பகுதியில் ஒன்றன் கீழ் ஒன்றாக இரு தராசுத்தட்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அடித்தட்டு நீரில் மூழ்கி இருக்கிறது. இதற்காக நிறுத்துகையில் ஒரு மேடையும் அதன்மேல் தண்ணீர் உள்ள முகவையும் உள்ளது. கம்பிச்சுருளின் பக்கம் நிறுத்துகையில் ஓர் அளவுகோல் உள்ளது. பொருளை மேல்தட்டில் வைத்து கம்பிச்சுருள் எவ்வளவு நீட்சியினைப் பெறுகிறது எனக்கண்டு, பின் பொருளினை அடித்தட்டில் வைத்து நீட்சியினைக் காண வேண்டும்.
இந்த அளவுகள் முறையே w , w' என்றால்:
- ஒப்படர்த்தி = [2]