ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு
வார்ப்புரு:Infobox scientist சர் ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு (Sir James Hopwood Jeans;[1] 11 செப்டம்பர் 1877 – 16 செப்டம்பர் 1946[2]) ஓர் ஆங்கிலேய இயற்பியலாளரும், வானியலாளரும், கணிதவியலாளரும் ஆவார்.
இளமை
இலங்காசயர் ஆர்ம்சுகிர்க்கில் பிறந்த இவர், ஒரு நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளரும் எழுத்தாளரும் ஆகிய வில்லியம் துல்லோச் ஜீன்சு என்பவரின் மகனாவார். இவர் நார்த்வுடில் உள்ள வணிகர் டெய்லர் பள்ளியிலும் வில்சன் இலக்கணப் பள்ளியிலும்வார்ப்புரு:Sfnவார்ப்புரு:Sfn கேம்பர்வெல்லிலும் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியிலும் கல்வி பெற்றார்.[3]
இவர் பள்ளியில் அறிவுசால் மாணவராக விளன்கினார். எனவே இவரைக் கேம்பிரிட்ஜ் கணிதவியல் முத்திறப் போட்டியில் முனைவாக பங்கேற்குமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டன:வார்ப்புரு:Sfn
பணி
இவர் 1901 அக்தோபரில் டிரினிட்டி கல்லூரி ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] மேலும் கேம்பிரிட்ஜில் கல்வி பயிற்றுவித்துள்ளார். இவர் 1904 இல் பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்துக்குப் பயன்முறைக் கணிதவியல் பேராசிரியாராகச் சென்று சேர்ந்துள்ளார். பின்னர் இவர் கேம்பிரிட்ஜுக்கு 1910 இல் திரும்பி வந்துள்ளார்.
இவர் குவையக் கோட்பாடு, கதிவீச்சுக் கோட்பாடு, உடுக்கணப் படிமலர்ச்சி என இய்ற்பியலின் பல புலங்களில் முதன்மையான பணிகளை ஆற்றியுள்ளார். செழல் பொருள்களின் இவரது ஆய்வு ஒற்றை வளிம முகிலில் இருந்து சூரியக் குடும்பம் தோன்றியது என்ற பியேர் சைமன் இலாப்புலாசின் கோட்பாடு சரியானதன்று என்ற முடிவுக்கு இட்டு சென்றது. இவர் இதற்கு மாற்றாக, சூரியனை கடந்த விண்மீன் ஒன்றின் உடனான நெருங்கிய மோதலால் சிதறிய பொருள்களை ஈர்த்துக் கோள்கள் உருவாகின எனும் கோட்பாட்டை முன்மொழிந்தார். இன்று இக்கோட்பாடு ஏற்கப்படவில்லை.
ஜீன்சும் ஆர்த்தர் எடிங்டனும் பிரித்தானிய அண்டவியலை உருவாக்கினர். இவர் 1928 இல் புடவியில் தொடர்ந்து பொருண்மம் படைக்கப்படுவதான கருதுகோளை முன்வைத்து, முதன்முதலாக ஒரு நிலைத்த நிலை அண்டவியலைக் கற்பிதம் செய்தார்.வார்ப்புரு:Sfn வானியலும் அண்டவியலும் எனும் தன் 1928 ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் இவர் பின்வருமாறு கூறுகிறார்: "ஒண்முகில்களின் மையங்கள் இயற்கையின் தனிமைப் புள்ளிகளாக(சுழி வழுநிலைகளாக) அமைதலே அடிக்கடி முன்னிறுத்தப்படும் கருதுகோள் வகைகளாகின்றன. இப்புள்ளியில் நம் அண்டத்துக்குள் முற்றிலும் வேறான வெளியில் இருந்து பொருண்மம் கொட்டுகிறது அல்லது பொழிகிறது. எனவே அண்டத்தின் இப்புள்ளி பொருள் தொடர்ந்து உருவாகிறது."[6] இக்கோட்பாடு 1965 இல் அண்ட நுண்ணலைப் பின்னணி கண்டறிந்ததும் வழக்கிறந்து விட்டது. இப்பின்னணி பெருவெடிப்பின் அடையளத்தைக் காட்டும் சான்றாகப் பரவலாகக் கொள்ளப்பட்டது.
வளிமங்களின் இயங்கியல் கோட்பாடு எனும் 1904 இல் வெளியிட்ட தனிவரைவு நூலும் மின்சாரமும் காந்தமும் பற்றிய கணிதவியல் கோட்பாடு எனும் 1908 இல் வெளியிட்ட தனிவரைவு நூலும் இவரது அறிவியல் புகழ் பரவ காரணமாயின. இவர் 1929 இல் ஓய்வு பெற்றதும், பொதுமக்களுக்கான பல நூல்களை எழுதினார். இவற்றில் விண்மீன் தடங்கள் (1931), நம்மைச் சுற்றியுள்ள அண்டம், கால, வெளி ஊடாக (1934), அறிவியலின் புதிய பின்னணி (1933), விளங்கிக் கொள்ளமுடியாத புடவி ஆகியன அடங்கும். இந்த நூல்கள் இவருக்குத் தன் சமகால புரட்சிகர அறிவியல் கண்டுபிடிப்புகளை, குறிப்பாக சார்பியல் கோட்பாடு, அண்டக் கட்டமைப்பியல் புலங்களில் பெரும்புகழ் ஈட்டித் தந்தது.
பிரித்தானிய வானியல் கழக இதழ் 1939 இல் ஜீன்சு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக நிற்கப்போவதாக அறிவித்தது. இந்தத் தேர்தல் 1939 அல்லது 1940 இல் நடக்கவிருந்தது. ஆனால் 1945 வரை தேர்தல் நடக்கவில்லை. இவரும் பிறகு இதில் ஈடுபாடேதும் காட்ட வில்லை.
இவர் "இயற்பியலும் மெய்யியலும் " எனும் நூலை 1943 இல் எழுதியுள்ளார். இநூலில் இவர் அறிவியல், மேய்யியல் ஆகிய இருவேறு நோக்குகளில் நிலவலைப் பற்றிய வேறுபடும் பார்வைகளின் தேடலை நிகழ்த்துகிறார். சமயம் சார்ந்த பார்வைகளில், பிரீமேனைப் போல அறியொணாவாதி ஆவார்.வார்ப்புரு:Sfnவார்ப்புரு:Sfn
சொந்த வாழ்க்கை
ஜீன்சு இருதடவை திருமணம் செய்துகொண்டார்; முதலில் அமெரிக்கக் கவிஞரான சார்லட்டி திபானி மிட்செலை 1907 இல் மணந்தார்.[7] பின்னர், இவர் ஆத்திரிய கருவி இசைஞரும் வில்நாண் இசைஞரும் ஆகிய சுசான்னி காக்கை (சுசி ஜீன்சு எனப்பெயரால் பரவலாக அறியப்பட்டவரை) 1935 இல் மணந்தார். இவர் சுரேவில் உள்ள தோர்க்கிங்கில் இறந்தார்.
நார்த்வுடு வணிகர் டெய்லர் பள்ளியில் ஜேம்சு ஜீன்சு நினைவாக கல்வி நல்கைத்தொகை வழஙப்படுகிறது. இது நுழைவுத் தேர்வில் பலதுறைகளில், குறிப்பாக கணிதத்திலும் அறிவியல் புலங்களிலும் தன்னிகரற்ற திறமையைக் காட்டும் மாணவருக்கு வழங்கப்படுகிறது.
முதன்மையான கொடைகள்
ஜீன்சின் கண்டுபிடிப்புகளில் ஒன்று ஜீன்சு நீளம் ஆகும். இது விண்வெளியின் உடுக்கண வெளியில் நிலவும் வளிம முகிலின் உய்யநிலை ஆரமாகும். இது அந்த முகிலின் வெப்பநிலையையும் அடர்த்தியையும் அதன் உட்கூற்று துகள்களின் பொருண்மையையும் சார்ந்துள்ளது. ஜீன்சு நீளத்தை விட சிறிய முகில், விண்மீன் உருவாக்கத்துக்கான, வளிம விலக்கு விசையை எதிகொள்ள வேண்டிய, ஈர்ப்பு விசையைப் பெற்றிருக்காது, இதேபோல, ஜீன்சு நீளத்தை விட பெரிய முகில் குலைந்துவிடும்.
இவர் ஜீன்சு பொருண்மை அல்லது ஜீன்சுக் குலைவு (நிலைப்பின்மை) எனப்படும் மற்றொரு வகைச் சமன்பாட்டை மேற்கூறிய சமன்பாட்டுக்கு நிகராக கொணர்ந்தார். இது குலைவதற்கு முன்பு ஒரு முகிலில் திரளவேண்டிய உய்யநிலை பொருண்மைக்கான தீர்வை வழங்குகிறது.
இவர் இராலே-ஜீன்சு விதியைக் கண்டறிய உதவினார். இவ்விதி கரும்பொருளின் கதிர்வீச்சு ஆற்றலை உமிழ்வு வாயிலின் வெப்பநிலையோடு உறவுபடுத்துகிறது.
இவர் ஒரு கோளில் இருந்து வளிம மூலக்கூறுகள் தம் இயக்க ஆற்றலால் வெளியேறும் வளிமண்டலத் தப்பிப்பு வீதத்தை கணக்கிடும் முறையை வகுத்தளித்தார் இந்த வளிமண்டல வளிமத் தப்பிப்பு நிகழ்வு ஜீன்சு தப்பிப்பு என வழங்கப்படுகிறது.
கருத்துமுதலியம்
இலண்டன் அப்சர்வரில் வெளியான ஒரு நேர்காணலில், " கோளில் நிலவும் உயிர் தற்செயலான விளைவால் தன் தோன்றியதாக நம்புகிறீர்களா அல்லது இது ஒரு பெருந்திட்டத்தின் பகுதியாக நம்புகிறீர்களா?",எனும் கேள்வியைக் கேட்டபோது பினவருமாறு பதிலிறுத்துள்ளார்:
தகைமைகளும் விருதுகளும்
- அரசு கழக உறுப்பினர், மே, 1906
- பேக்கர் விரிவுரை, அரசு கழகம், 1917.
- அரசு பதக்கம் அரசு கழகம், 1919.
- ஆப்கின்சு பரிசு, கேம்பிரிட்ஜ் மெய்யியல் கழகம் 1921–1924.
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்]], 1922.
- இவர் 1928 இல் சர் பட்டம் பெற்றார்.
- பிராங்ளின் பதக்கம், பிராங்ளின் நிறுவனம், 1931.
- இவர் காலமும் வெளியும் ஊடே (Through Space and Time) எனும் தலைப்பில் அரசு நிறுவனக் கிறித்தவ விரிவுரை ஆற்ர 1933 இல் இவர் அழைக்கப்பட்டார்.
- முகர்ஜி பதக்கம், இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், 1937.
- தலைவர், இந்திய அறிவியல் பேராயம், 25 ஆம் கருத்தரங்கு, 1938.
- கொல்கத்தா பதக்கம், இந்திய அறிவியல் பேராயக் கழகம் 1938.
- தகைமை ஆணை உறுப்பினர், 1939.
- நிலாவின் ஜீன்சு குழிப்பள்ளமும் செவாயின் ஜீன்சு குழிப்பள்லமும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.
- 1977 இல் இவரது நூற்றாண்டு விழாவுக்காக இசைவகுப்பாளர் இராபெர்ட் சிம்சன் காற்சரம் எண் 7 எனும் பண் இயற்றப்பட்டது, 1977.
நூல்தொகை
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
- வார்ப்புரு:Cite book
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Britannica article includes photo
இணைய ஆவணத்தில் கிடைக்கும் ஜீன்சுவின் பணிகள்
- 1904. The Dynamical Theory of Gases
- 1906. Theoretical Mechanics
- 1908. Mathematical Theory of Electricity and Magnetism
- 1947. The Growth of Physical Science
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;frsஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Findmypastஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;AutoKG-3என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;AutoKG-5என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;LDN1901என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;huffpostஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;AutoKG-10என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை