கருத்தியல் வளிம விதி
ஒரு கருத்தியல் வளிம விதி (Ideal gas law) என்பது, ஒரு கருத்தியல் வளிமத்தின் நிலைகளை விவரிக்கும் ஒரு நிலைச் சமன்பாடு ஆகும். இதில் சிறு குறைகள் இருந்தாலும், பெரும்பாலான வளிமங்களின் பலவகையான புறநிலையில் அவற்றின் இயல்பை விவரிக்க இவ்விதி உதவுகிறது. இது 1834ஆம் ஆண்டு பென்வா கிளேப்பரோன் என்பவரால் முன்வைக்கப்பட்டது. தரவுகளின் அடிப்படையில் விளக்கப்பட்ட பாயில் விதி, சார்லசு விதி, அவகாதரோவின் விதி ஆகியவற்றின் கலவையாக இதனை வெளிப்படுத்துகின்றார்.[1]
பெரும்பாலும், கருத்தியல் வளிம விதி, கீழ்க்காணும் சமன்பாட்டின் மூலமாக வெளிப்படுத்தப்படும்.
- ,
இதில்:
- என்பது வளிமத்தின் அழுத்தம்
- என்பது வளிமத்தின் கனவளவு
- என்பது வளிமத்தின் மோல் அளவு,
- என்பது கருத்தியல் வளிம மாறிலி,
- என்பது வளிமத்தின் வெப்பநிலை
என்றாகும்.