காந்த வில்லை

testwiki இலிருந்து
imported>TNSE Mahalingam VNR பயனரால் செய்யப்பட்ட 15:52, 29 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

காந்த வில்லை (Magnetic lens) என்பது காந்த இலாரன்சு விசையைப் பயன்படுத்தி எதிர்மின்னிகள் மற்றும் அயனிகளைக் குவித்தல் விலக்குதலுக்காக பயன்படுத்தப்படும் ஒரு காந்தவியல் கருவியாகும். இதன் ஆற்றல் மின்காந்தங்களைப் பொறுத்து மாறுபடும். இவை எதிர்மின் கதிர் குழாய்கள் முதல் எதிர்மின்னி நுண்ணோக்கி மற்றும் துகள் முடுக்கி வரை பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வடிவமைப்பு

ஒரு காந்த வில்லையானது நான்முனை அல்லது அறுமுனை அலலது இன்னும் உயர் வடிவ முனைகளாக வரிசையில் அமைக்கப்பட்ட மின்காந்தங்களைக் கொண்டிருக்கும். மின்காந்த கம்பிச்சுருளானது ஒரு சதுரம் அல்லது மற்றொரு ஒழுங்கு பல்கோணி அமைப்பின் முனைகளில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த அமைப்பிலிருந்து ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட காந்தப்புலமானது உருவாக்கப்பட்டு துகள் அலைக்கற்றையை கையூடாற்ற முடியும்.

இந்த அமைப்பின் ஊடாக செல்லும் துகள்களானவை இரண்டு வெக்டர் விசைகளுகக்குட்படுத்தப்படுகின்றன. HZ (மையப்பகுதிக்கு இணையானது), மற்றும் HR (வில்லையின் ஆரத்திற்கு இணையானது). HR இவை துகளை வில்லையை நோக்கி சுழல் பாதையில் பயணிப்பதற்கு காரணமாகின்றன, இந்த சுழல் பாதையானது எதிர்மின்னியை HZ க்கு வெளிப்படுத்தி அதன் குவியத்தை மாற்றுகின்றது. காந்தப்புலமானது ஒருபடித்தானதல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள, அச்சிலிருந்து தொலைவில் செல்லும் துகள்களை விட மையத்திற்கு அருகாமையிலான துகள்கள் குறைவான விசையோடு விலக்கமடைகின்றன.[1]

மேற்கோள்கள்

  1. Hafner B., 2008, Introductory Transmission Electron Microscopy Primer, Characterization Facility, University of Minnesota – "Reference"
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=காந்த_வில்லை&oldid=1315" இலிருந்து மீள்விக்கப்பட்டது