சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை

testwiki இலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 21:40, 13 சனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Selvasivagurunathan m, சமப்படுத்தபட்ட மாதாந்திர தவணை பக்கத்தை சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சமநிலைப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை (Equated monthly installment, சுருக்கமாக:இஎம்ஐ) என்பது "வட்டி மற்றும் அசல் சேர்ந்த ஒரு சமமான தொகையை கணக்கிட்டு, மாறாத கடன் தொகையை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தி தீர்க்கும் ஒரு நிதி சார்ந்த கணக்கீட்டு முறையாகும்." கடனாக வாங்கியத் தொகை, அதற்கான வட்டி விகிதம் மற்றும் அதனைத் திருப்பிச் செலுத்தும் காலம் போன்றவற்றை அடிப்டையாகக் கொண்டு கடன்காலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் மாறாத அளவில் இந்த தொகை நிர்ணயிக்கப்படும். [1]

கணிதவியல் முறை

இந்த இஎம்ஐ ஆனது பின்வருமாறு கணித கணக்கீடு முறையில் வரையறுக்கப்படுகிறது.[2]

P=A1(1+r)nr

or, equivalently,

A=Pr(1+r)n(1+r)n1

இதில் P என்பது கடன் தொகையையும், A என்பது தவணை தொகையையும், r என்பது 100 ஆல் பிரிக்கப்பட்ட வருடாந்திர வட்டி விகிதம் (மாதாந்திர தவணைகளாக இருந்தால் வருடாந்திர வட்டி விகிதம் 12 ஆல் பிரிக்கப்படும்), மற்றும் n என்பது தவணை காலத்தையும் குறிக்கும். காலம் மாதங்களாகவோ, குறிப்பிட்ட இடைவெளியுள்ள நாட்களாகவோ இருக்கலாம்.

பயன்கள்

அடமானக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன் போன்ற காலக்கெடு உள்ள கடன்களை திருப்பி செலுத்தவும், ஒவ்வொரு மாதமும் தங்கள் கடனுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை கடனாளிகள் துல்லியமாக அறிந்து கொள்ளவும், அதன்மூலம் தனிநபர்களின் வரவுசெலவு நிர்வாகத்தை திறமையாக செய்யவும் பயனளிக்கிறது. [3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist