தொடர்ச்சியான சார்பு ( கண கோட்பாடு)

testwiki இலிருந்து
imported>Neechalkaran பயனரால் செய்யப்பட்ட 16:15, 24 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Neechalkaran, தொடா்ச்சியான சாா்பு ( கண கோட்பாடு) பக்கத்தை தொடர்ச்சியான சார்பு ( கண கோட்பாடு) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: ஒருங்குறிப் பிழை நீக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கணிதத்தில், சிறப்பாக கண கோட்பாட்டில், தொடா்ச்சியான சாா்பு என்பது எல்லை நிலைகளில்  அனுமானித்த மதிப்புகளை  முந்தைய நிலைகளில் எல்லைகளாகக் கொண்ட வரிசை எண்களின் தொடா்வரிசையாகும். சொல்லப் போனால்,   γ என்பதை வரிசை எண் என்க, மற்றும் s:=sα|α<γ என்பது γ- வரிசைகளின் தொடா்வரிசையாகும் எனில் எல்லா எல்லை வரிசை β < γ விலும் s தொடா்ச்சியான சாா்பு ஆகும்.

sβ=lim sup{sα:α<β}=inf{sup{sα:δα<β}:δ<β}

மேலும்

sβ=lim inf{sα:α<β}=sup{inf{sα:δα<β}:δ<β}.

மாற்றுமுறையில், s ஒரு தொடா்ச்சியான சாா்பு எனில் s: γ → வரிசை பரப்புருவில் அமைந்த கணங்களை  கொண்ட ஆட்களம் ,தொடா்ச்சியான சாா்பு ஆகும். இந்த தொடா்ச்சியான சாா்புகள் பெரும்பாலும் துணை இறுதிமைகள் மற்றும் தலையாய எண்களில் பயன்படுத்தப்படுகிறது.

இயல்நிலை சாா்பு என்பது தொடா்ச்சியான மற்றும் ஓரியல்புச் சாா்பு ஆகும்.

மேற்கோள்கள்