பார்ன் சமன்பாடு
பார்ன் சமன்பாடு (Born Equation) என்பது ஒரு வாயுநிலையில் உள்ள அயனியின் கரைதல் சார்ந்த கிப்சின் கட்டில்லா ஆற்றலை மதிப்பிட உதவும் ஒரு வழியாகும். இச்சமன்பாடு கரைப்பானை ஒரு தொடர் இரு முனைய புகு ஊடகமாகக் கருதுகிறது. (இது தொடர் கரைப்பானேற்ற முறைகளில் ஒன்றாக உள்ளது) இந்த சமன்பாடு மேக்சு பார்ன் என்பவரால் வருவிக்கப்பட்டது.[1]
மாறிகளுக்கான விளக்கம்:
- NA = அவகட்ரோ எண்
- z = அயனியின் மின்சுமை
- e = எதிர்மின்னியின் மின் சுமை, 1.6022வார்ப்புரு:E C
- ε0 = வெற்றிடத்தின் மின் உட்புகுதிறன்
- r0 = அயனியின் செயல்படு ஆரம்
- εr = கரைப்பானின் மின்காப்பு மாறிலி