மத்திசன்–பப்பாபெத்ரு–டிக்சன் சமன்பாடுகள்

testwiki இலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 15:49, 2 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இயற்பியலில், குறிப்பாக பொதுச் சார்புக் கோட்பாடில், மத்திசன்–பப்பாபெத்ரு–டிக்சன் சமன்பாடுகள் (Mathisson–Papapetrou–Dixon equations) ஈர்ப்புப் புலம் ஒன்றில் செல்லும் தன்னைத்தானே சுழலும் விண்பொருளின் இயக்கத்தை விவரிக்கின்றன.

இச்சமன்பாடுகளை மைரன் மெத்திசன்,[1] டபிள்யூ. டி. டிக்சன்,[2] அகிலெசு பப்பாபெத்ரு[3] எனும் இயற்பியலாளர்கள் தனித்தனியாக வெவ்வேறு காலகட்டங்களில் கோட்பாட்டளவில் கண்டறிந்தனர். ஆகையால், அவர்களின் பெயராலேயே இச்சமன்பாடு அழைக்கப்பெறுகிறது.

m நிறையுள்ள ஒரு விண்பொருளொன்றின் இயக்கத்தை, கீழ்க்காணும் பண்புரு சமன்பாடுகளின் மூலம் காணலாம்.

Dds(muλ+uμDSλμds)=12uπSρσRλπρσ

DSμνds+uμuσDSνσdsuνuσDSμσds=0

இங்கு,

λ,μ,ν,π,ρ,σ என்பன ஐன்சுடைன் கூட்டுக்குறிகள்
u என்பது 4-திசையன் திசைவேகம் (four velocity)
S சுழற்சிப் பண்புரு (spin tensor)
R இரீமன் வளைப்பண்புரு (Riemann curvature tensor)
D என்பது ஆயஞ்சாரா வகைக்கெழு இயக்கி அல்லது இணைமாறற்பெறுதி (covariant derivative)
s நேரவெளிப் படுகையின் தொடுகோட்டுவெளித் துணையலகு (affine parameter)

மத்திசன்-பப்பாபெத்ரு சமன்பாடுகள்

m திணிவுள்ள துணிக்கை ஒன்றின் மத்திசன்-பப்பாபெத்ரு சமன்பாடுகள் பின்வருமாறு:[4][5]

Ddsmuλ=12uπSρσRλπρσ

DSμνds+uμuσDSνσdsuνuσDSμσds=0

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist