மறைத் தடையம்

testwiki இலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 16:56, 2 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள் பிழை நீக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
உடனொளிர்வு விளக்கு, மாறுபடும் மறைத் தடையம் காரணமாக செயற்படும் ஒரு கருவி ஆகும்.[1][2] இதன் செயற்பாட்டில், உடனொளிர்வு குழாய்களில் மின்னோட்ட அளவு அதிகரிக்கும் போது அதன் மின்னழுத்தவேறுபாடு குறைவுறுகின்றது. மின்னினைப்புக்கு தொடுக்கப்பட்டுள்ள குழாயில் குறைவுபடும் மின்னழுத்த வேறுபாடு ஓட்டத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. இது வளைவு பிரகாசம் உருவாக காரணமாகின்றது.[1] To prevent this, fluorescent tubes are connected to the power line through a ballast. The ballast adds positive impedance (AC resistance) to the circuit to counteract the negative resistance of the tube, limiting the current.[1]

இலத்திரனியலில், மறைத் தடையம் (negative resistance) என்பது சில இலத்திரனியல் சுற்றுக்கள் மற்றும் கருவிகளில் மின்னழுத்த வேறுபாட்டில் ஏற்படும் அதிகரிப்புக்கு ஏற்ப மின்னோட்ட குறைவுபடும் தன்மைகளைக் காட்டும் இயல்பாகும். [3][4]

இது சாதாரண தடையத் தொழிற்பாட்டுக்கு முரணானது; ஏனெனில் ஓமின் விதிப்படி மின்னழுத்த வேறுபாடு அதிகரிக்கும் போது நேர்த்தடையம் காரணமாக அதற்கு விகிதசமமாக மின்னோட்டம் அதிகரிக்கும்.[5] அதேவேளை நேர்த்தடையம் தன் ஊடாக மின்னோட்டம் பாயும் போது சக்தியை உள்ளெடுக்கும் ஆனால் மறைத்தடையம் சக்தியை உற்பத்தியாக்கும்.[6][7] சில நிபந்தனைகளின் கீழ் இது மின்சமிக்கைகளின் வலுவை அதிகரிக்கக் கூடியதாயிருக்கும் .[8][9]

மறைத்தடையம் ஒருசில மின் சாதனங்களால் மட்டும் காட்டப்படும் பொதுவாகக் காணப்படாத ஒரு இயல்பாகும். நேர்ப்பாங்கற்ற மின் சாதனங்களில் இரண்டு வகையான தடையங்களைக் காணலாம்: அவை நிலையான அல்லது மாறாத்தடையி- இதில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டத்திற்கான விகிதம் தடையமாகும்.v/i,மற்றையது மாறும் தடையம் - இதில் மின்னழுத்த வேறுபாட்டின் மாற்றம் மற்றும் நேரோத்த மின்னோட்ட மாற்றங்களுக்கான விகிதம் தடையாகும் Δv/Δi. மறைத்தடையம் எனப்படுவது மாறும் மறைத்தடையம் ஆகும்.(NDR), Δv/Δi<0. பொதுவாக மாறும் மறைத் தடையம் இரண்டு முடிவிடக் கூறுகளை கொண்டதாக அதாவது மின்னோட்டத்தை பெருக்கக் கூடியதாகவும்,[10][11] அதன் முனைவுகளில் தொழிற்படும் நேரோட்ட மின்னை ஆடலோட்ட மின்னோட்டமாக மாற்றி அதே முனைவுகளில் ஆடலோட்ட சமிக்கைகளில் பிரயோகிப்பதாக உள்ளது.[6][12] இவை இலத்திரனியல் அலைவுமானிகள் மற்றும் ஒலிபெருக்கிகளில் பயன்படுத்தப்படுகின்றன,[13] குறிப்பாக நுண்ணலை மீடிறங்களில் இவை பயன்படுத்தப்படும். அநேக நுண்ணலை சக்தி மூலம் செயற்படும் கருவிகள் மாறும் மறைத்தடையத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறன.[14]

வரைவிலக்கணம்

மாறாத் தடையம் (எதிர் சாய்வு கோடு B) மற்றும் மாறும் தடையம் (எதிர் சாய்வு கோடு C) ஆகியவற்றைக் காட்டும் மின்னோட்ட-மின்னழுத்தவேறுபாட்டு (I–V) வரைபு.

மின் சாதனம் அல்லது மின் சுற்று ஒன்றின் இரு முனைவுகளுக்கிடையில் காணப்படும் மின் தடையம் மின்னோட்ட-மின்னழுத்தவேறுபாட்டு (I–V) வரைபு மூலம் தீர்மானிக்கப்படும். அதாவது ,ஊடாகப் பாயும் மின்னோட்டம் i ஆக உள்ளபோது அதன் மின்னழுத்த வேறுபாடு v ஆயிருக்கும்.[15] சாதாரணமான நேர்த்தடையம் உள்ளடங்கலாக அனேகமான இலத்திரனியல் சாதனங்கள் ஓமின் விதியை அனுசரித்து செயற்படும். அதாவது பெரும்பாலும் ஓடும் மின்னோட்டத்திற்கு நேரோத்ததான மின்னழுத்தம் வேறுபாட்டைக் காட்டும்.[5] ஆகவே மின்னோட்ட-மின்னழுத்தவேறுபாட்டு (I–V) வரைபு நேர் சாய்வு கொண்ட நேர் கோடாக இருக்கும். ஆகவே தடையம் எனப்படுவது மின்னோட்டம்-மின்னழுத்தவேறுபாட்டு ஆகியவற்றுக்கான விகிதம், இது மாறிலியான எதிர்ச் சாய்வு ஆகும்.

Nமறைத் தடையம் ஓமின் விதிக்கு இசைந்து நடக்காத ஒரு சில கருவிகளிலேயே இடம்பெறுகின்றது.[16] நேரியது அல்லாதா கூறுகளுக்கு I–V வரைவு நீர் கோடாக இருக்காது.[5][17] இது ஓமின் விதிக்கு அமைந்து நடக்காது.[16] தடையத்தினை வரையறுக்க முடிந்தாலும், அது மாறிலியாக இருக்காது. இது கருவியூடு செல்லும் மின்னூட்டம் அல்லது மின்னழுத்தவேறுபாட்டுக்கு ஏற்ப இது மாறும்.[10][16] இத்தகைய நேரியதல்லாத கருவிகளினுடு செல்லும் தடையங்கள் இரு வழிகளில் விபரிக்கப்படும்.[17][18][19] அவை ஓமின் தடையங்களுக்கு சமானமாய் அமையும்.:[20]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=மறைத்_தடையம்&oldid=1392" இலிருந்து மீள்விக்கப்பட்டது