அம்மோனியம் சயனேட்டு
வார்ப்புரு:Chemboxஅம்மோனியம் சயனேட்டு (Ammonium cyanate) NH4OCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது நிறமற்ற திண்மம் ஆகும்.
அமைப்பு மற்றும் வினைகள்
இந்த உப்பின் அமைப்பானது, எக்சு கதிர் படிகவியல் ஆய்வின்படி சரிபார்க்கப்பட்டது. C−O மற்றும் C−N பிணைப்பு நீளங்களானது முறையே 1.174(8) மற்றும் 1.192(7) Å ஆக உள்ளன. இந்த நீளமானது, O=C=N− பிணைப்பு நீளத்துடன் ஒத்திசைவாக உள்ளது. NH4+ ஆக்சிசனோடு அல்லாமல் நைட்ரசனோடு ஐதரசன் பிணைப்புகளை உருவாக்குகிறது.[1]
இந்தச் சேர்மமானது புகழ் பெற்ற ஓலர் தொகுப்பு முறையில், ஆய்வகத்தில் தொகுக்கப்பட்ட முதல் கரிமச் சேர்மமான யூரியாவை தயாரிக்கப் பயன்பட்ட முன்னோடி கனிம வினைபடு பொருட்களில் ஒன்றாகும். [2]