ஈயம்(II) சல்பேட்டு

testwiki இலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 04:31, 18 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:ஈய சேர்மங்கள்; added Category:ஈயம்(II) சேர்மங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கனிமச் சேர்மம்வார்ப்புரு:Chembox ஈயம்(II) சல்பேட் (Lead(II) sulfate) என்பது PbSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு வெண்மை நிறத் திண்மமாகும். இது நுண்படிக அமைப்பைக் கொண்டுள்ளது. இது பால் வெள்ளை, சல்பூரிக் அமிலத்தின் ஈய உப்பு அல்லது ஆங்கிள்சைட் என்றும் அழைக்கப்படுகிறது .

இது பெரும்பாலும் ஈய அமில மின்கலன்களின் தகடுகள் / மின்முனைகளில் காணப்படுகிறது, மின்கலங்கள் மறுமின்னேற்றம் செய்யப்படும்போது ஈய சல்பேட்டானது அல்லது ஈய(IV) ஆக்சைடு மற்றும் கந்தக அமிலமாக எதிர் மின்முனையிலோ உலோக ஈயம் மற்றும் கந்தக அமிலமாக நேர்மின் முனையிலோ சேகரமாகிறது. ஈய சல்பேட்டு தண்ணீரில் மிகக் குறைந்த அளவே கரையக்கூடியது.

உற்பத்தி

ஈய ஆக்சைடு அல்லது ஈய ஐதராக்சைடு அல்லது ஈய கார்பனேட்டு ஆகியவற்றில் ஒன்றை சூடான கந்தக அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலமோ அல்லது கரையக்கூடிய ஈய உப்பை கந்தக அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலமோ ஈய(II) சல்பேட் தயாரிக்கப்படுகிறது.

மாற்றாக, ஈய நைட்ரேட்டு மற்றும் சோடியம் சல்பேட்டு ஆகியவற்றின் கரைசல்களுக்கிடையேயான வினை மூலமும் இதை உருவாக்க முடியும்.

நச்சியல்

ஈய சல்பேட்டு உள்ளிழுத்தல், உட்கொள்வது மற்றும் தோலில் படுதல் ஆகியவற்றின் காரணமாக நச்சுத்தன்மை வாய்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து இதன் அளவு அதிகமாகும் போதும், மீண்டும் மீண்டும் ஈய வெளிப்பாட்டுடன் தொடர்பு ஏற்படுவதன் மூலமும் இரத்த சோகை, சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு அல்லது மத்திய நரம்பு மண்டலத்திற்கு (குறிப்பாக குழந்தைகளில்) சேதம் ஏற்படலாம். இது அரிக்கும் தன்மையுடையது. கண்களுடன் தொடர்பு ஏற்படும் போது கடுமையான எரிச்சலும் தோலோடு தொடர்பு ஏற்படும் போது தீக்காயங்கள் போன்ற புண்கள் எற்படவும் வழிவகுக்கும். வழக்கமான தொடக்க நிலை வரம்பு மதிப்பு 0.15 மிகி/மீ3 ஆகும்.

தாது

இயற்கையான கனிமம் ஆங்கிள்சைட்டு, PbSO4, முதன்மையான ஈய சல்பைடு தாது, கலீனாவின் ஆக்சிசனேற்றத்தால் கிடைக்கப்பட்ட விளைபொருளாகக் கிடைக்கிறது.

கரைதிறன்

இச்சேர்மம் சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில் கரையக்கூடியதாகும். செறிவூட்டப்பட்ட ஐதரயோடிக் அமிலம் மற்றும் சூடான நீரில் சிறிதளவு கரையக்கூடியது. ஆனால், எத்தனாலில் கரையாது. கரிம உலோகச் சேர்மங்கள் நீர் மற்றும் கரிமக் கரைப்பான்களில் கரையும் தன்மை கொண்டவை ஆகும்.

கார மற்றும் ஐதரசன் ஈய சல்பேட்டுகள்

பல ஈய கார சல்பேட்டுகள் அறியப்பட்டுள்ளன: PbSO4·PbO; PbSO4·2PbO;PbSO4·3PbO; PbSO4·4PbO போன்றவை அத்தகைய ஈய கார சல்பேட்டுகள் ஆகும். இவை ஈய அமில மின்கலங்களுக்கான செயலுறு பசை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. இதனுடன் தொடர்புடைய ஒரு கனிமமானது லெட்ஐலைட்டு 2PbCO3·PbSO4·Pb(OH)2 ஆகும்.

சல்பூரிக் அமிலத்தின் அதிக செறிவில் (> 80%), ஈய ஐதரசன்சல்பேட்டு, Pb(HSO4)2, உருவாகின்றது.[1]

வேதியியல் பண்புகள்

ஈய(II) சல்பேட்டை செறிவூட்டப்பட்ட HNO3, HCl, H2SO4 ஆகியவற்றில் கரைத்து அமில உப்புக்கள் அல்லது அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது, மேலும் செறிவூட்டப்பட்ட காரங்களுடன் கரையக்கூடிய டெட்ராஐதராக்சிடோபிளம்பேட்டு (II) [Pb(OH)4]2− அணைவுச் சேர்மங்களை உருவாக்குகின்றன.

PbSOA4(s)+HA2SOA4(conc.) Pb(HSOA4)A2(aq)
PbSO 4 (s) + 4NaOH (aq) → Na 2 [Pb (OH) 4 ] (aq) + Na 2 SO 4 (aq)

1000° செல்சியசிற்கு மேல் வெப்பமடையச் செய்யும் போது காரீய(II) சல்பேட்டு சிதைவடைகிறது:

PbSO4 (s) → PbO (s) + SO3 (g)

பயன்கள்

ஈய சல்பேட்டு அச்சுத்தொழிலில் பயன்படுத்தப்படுகிறது. இது வண்ணப்பூச்சு உலர்த்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது .

குறிப்புகள்

வார்ப்புரு:Reflist

  1. Министерство образования и науки РФ, Реферат "Свинец и его свойства", 2007, http://revolution.allbest.ru/chemistry/00011389_0.html வார்ப்புரு:Webarchive
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஈயம்(II)_சல்பேட்டு&oldid=1442" இலிருந்து மீள்விக்கப்பட்டது