சோடியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு
சோடியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு (Sodium tetrachloroaurate) என்பது NaAuCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Na+ மற்றும் AuCl4- அயனிகள் சேர்ந்து சோடியம் டெட்ராகுளோரோ ஆரேட்டு உருவாகிறது. நீரிலி மற்றும் இருநீரேற்று நிலைகளில் வணிக ரீதியாகவும் கிடைக்கிறது [1]. அறை வெப்பநிலையில் இச்சேர்மம் தங்க ஆரஞ்சு நிறத்தில் ஒரு திண்மமாக தோன்றுகிறது.
தயாரிப்பு
டெட்ராகுளோரோ ஆரிக் அமிலக் கரைசலுடன் சோடியம் குளோரைடு அல்லது சோடியம் கார்பனேட்டு சேர்த்து ஒரு கலவை தயாரிக்கப்படுகிறது. 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் இக்கலவை நன்றாக கிளறப்பட்டு ஆவியாக்கம், குளிரூட்டம், படிகமாக்கம் ஆகிய தொடர் நடவடிக்கைகள் மூலமாக பாரம்பரியமாக இவ்வுப்பு தயாரிக்கப்படுகிறது. இறுதியாக நன்கு உலர்த்தப்பட்டு சோடியம் டெட்ராகுளோரோ ஆரேட்டின் ஆரஞ்சு நிறப் படிகங்கள் பெறப்படுகின்றன[2] [3].
இருப்பினும் தற்காலத்தில் தங்கத்துடன் சோடியம் ஆக்சி-ஆலசன் உப்புகளும் ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்த்து சோடியம் டெட்ராகுளோரோ ஆரேட்டை தயாரிக்கும் நவீன் தயாரிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன[2].
பயன்கள்
அசிட்டிலீனை ஐதரோகுளோரினேற்றம் செய்யும் வினைக்கு வினையூக்கியாகப் பயன்படுதல், சல்பைடுகளை ஆக்சிசனேற்றுதல் போன்ற பல்வகை பயன்பாட்டுகளுக்கு இது பயன்படுகிறது [3]
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ 2.0 2.1 வார்ப்புரு:Cite patent
- ↑ 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Westcottஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை