பரணி (நட்சத்திரம்)

testwiki இலிருந்து
imported>தணிகைவேல் மாரியாயி பயனரால் செய்யப்பட்ட 14:20, 18 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பரணி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் ஆகும். இது ஒரு மங்கலான நட்சத்திரம். சூழ்நிலை அனுகூலமாக இருந்தால் ஏறக்குறைய திசம்பர் 10 தேதிகளில் 22 மணியளவிலும் மூன்று மாதம் முன்னமேயே காலை 4 மணியளவிலும், இன்னும் மற்ற நாட்களில் அட்டவணைப்படியும் இதனைக் காணலாம்.

அறிவியல் விபரங்கள்

பரணி நட்சத்திரம் ஒரு பாகை வித்தியாசத்தில் விளங்கும் இரண்டு நட்சத்திரங்கள் கொண்டது: τ1 -Arietis, τ2-Arietis. இவைகளில் முதலாவது அதுவே மூன்று நட்சத்திரங்களால் ஆனது. இரண்டாவது, ஒரு இரட்டை நட்சத்திரம். முதலாவது 462 ஒளியாண்டு தூரத்திலும், இரண்டாவது 319 ஒளியாண்டு தூரத்திலும் இருக்கின்றன.

இரவில் மணி அறிதல்

இரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் பரணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

பரணி மும்மீன் அடுப்புப் போல,

திரண்மிகு கடகத்தொரு நாற்காலாம்.

பொருள்: மூன்று நட்சத்திரங்கள் அடுப்பு போல அமைந்திருக்கும். இது உச்சத்திற்கு வரும்போது கடகராசி உதித்து நான்கு நாழிகையாகியிருக்கும்.

எ.கா.: தை மாதம் 1ம் தேதி இரவு பரணியை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். மகர இராசியின் தொடக்கத்தில் சூரியன் இருப்பதால் சூரியனுக்கும் கீழ்த்தொடுவானத்திற்கும் உள்ள இடச்சுழி தூரத்தை இப்படி கணக்கிடலாம். மகரம், கும்பம், மீனம், மேசம், இரிடபம், மிதுனம் ஆகிய ஒவ்வொரு இராசிக்கும் ஏறக்குறைய 5 நாழிகை, கடகத்தில் ஒரு 4 நாழிகை இவைகளைக்கூட்டினால் 34 நாழிகையாகும். அதனால் சூரியன் அஸ்தமித்து 4 நாழிகையாகிறது. அதாவது அப்போதைய நேரம் 7-36 P.M.

இதற்கு ஒத்த வடமொழி வாய்பாடு பரணி கர்க்கீ சாபா.இங்கு "சாபா" என்ற சொல்லுக்கு க-ட-ப-ய எண்ணிக்கையில் சூட்சுமமாக 5 1/8 நாழிகை என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது பரணியை உச்சத்தில் பார்த்தால் கீழ்வானில் கடகராசி உதித்து 5 1/8 நாழிகையாகியிருக்கும் என்று கொள்ளவேண்டும். இதன்படி கணக்கெடுத்தால் அப்போதைய நேரம் 8-03 P.M.

இவற்றையும் பார்க்கவும்

துணை நூல்கள்

வார்ப்புரு:பஞ்சாங்கம்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பரணி_(நட்சத்திரம்)&oldid=146" இலிருந்து மீள்விக்கப்பட்டது