பெரோவிசுக்கைட்டு

testwiki இலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 11:13, 7 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox mineral பெரோவிசுக்கைட்டு (Perovskite) என்பது கால்சியமும் தைட்டேனியமும் கலந்த கால்சியம் தைட்டனேட்டுக் கனிமம் (CaTiO3). பெரோவிசுக்கைட்டு என்னும் இப்பெயர் கால்சியம் தைட்டனேட்டு CaTiO3 (XIIA2+VIB4+X2−3) படிக வகையைக் சேர்ந்தவற்றுக்கு வழங்கப்பெறுகின்றது, இது போன்ற பிற வகைகளையும் பெரோவிசுக்கைட்டு கட்டமைப்பு (|perovskite structure) என்றழைக்கப்படுகின்றது.[1] பல்வேறு வகையான நேர்மின்முனையப் (எதிர்மின்னிகளை ஈர்க்கும்) பொருள்களை இந்தக் கட்டமைப்பில் உள்புதைத்து பயனுடைய பொறியியல் பயன்பாட்டுப் பொருள்களை உருவாக்க முடியும் .[2]

வரலாறு

இக் கனிமத்தை ஊரல் மலைப்பகுதியில் உருசியர் குசுத்தாவ் உரோசு (Gustav Rose) 1839 இல் கண்டுபிடித்தார். இவர் உருசிய கனிமவியலாளரான இலேவ் பெரோவிசுக்கி (Lev Perovski) (1792–1856). என்பாரின் பெயரைச் சூட்டினார்[3] பெரோவிசுக்கைட்டின் குறிப்பிடத்தக்க படிக அமைப்பை முதன்முதலாக 1926 இல் விட்டர் கோற்றுசுமித்து (Victor Goldschmidt) உறழ்ச்சிக்கூறுகள் (tolerance factors) பற்றிய தன் படைப்பில் குறிப்பிட்டார்.[4] எலன் திக்கு மெகாவ் (Helen Dick Megaw) அவர்களின் பேரியம் தைட்டனேட்டைப் பற்றிய ஊடுகதிர் சிதறல் தரவுகளின் அடிப்படையில் 1945 இல் பெரோவிசுக்கைட்டின் படிக அமைப்பு கண்டுபிடித்து வெளியிடப்பட்டது.[5]

கிடைப்பு

சிறப்புப் பண்புகள்

பெரோவிசுக்கைட்டின் நிலைப்புத்தன்மையானது தைட்டனேட்டின் வேதிவினைகளைப் பொருத்து அமைகின்றது.எரிமலைக் குழம்புப் பாறைகளில் தைட்டனேட்டும்(spene) பெரோவிசுக்கைட்டும் சேர்ந்து கிடைப்பதில்லை, ஒரேயொரு விலக்கு காமரூனில் கிடைக்கும் எட்டிண்டைட்டு (etindite).[6]

பருவியக்கப் பண்புகள்

பெரோவிசுக்கைட்டு பெரும்பாலும் கனசதுர (கட்டக) படிக அமைப்பைக் கொண்டது. பொதுவான வாய்பாடு வார்ப்புரு:Chem. இவ்வமைப்பில் மூலைகளில் உள்ள A இடத்து இயனி (ion) பொதுவாக புவியில் அரிதில்கிடைக்கும் தனிமக் காரங்களாக இருக்கும், கட்டகத்தின் நடுவே இருக்கும் B-இட இயனிகள் 3d, 4d, 5d வகை இடைநிலை மாழைகளாக ( transition metal elements) இருக்கும். கோற்றுசுமிட்டு உறழ்ச்சி அல்லது இசைவுக் கூறு t ஆனது 0.75–1.0 ஆகியவற்ருக்குள் இருந்தால். நிறைய எண்ணிக்கையான தனிம மாழை அணுக்கள் பெரோவிசுக்கைட்டு அமைப்பில் நிலைப்புத்தன்மை கொண்டவையாக இருக்கும். வார்ப்புரு:Cite journalவார்ப்புரு:Dead link</ref>

t=RA+RO2(RB+RO),

மேலுள்ளதில் RA, RB and RO ஆகியவை முறையே A, B யின் இயனி ஆரங்களும் ஆக்குசிசனின் ஆரமும் ஆகும்.

பெரோவிசுக்கைட்டுகள் மாழையைவிட (உலோகத்தைவிட) குறைந்த அல்லது அதே அளவு பளபளப்புள்ளவை. நிறமல்லா கீறுபொடி தருபவை, கனசதுரம் போன்ற ஆனால் சீரொழுங்கில்லாத பிளவுகள் உடைய அமைப்புடையவை. எளிதில் உடையும் தன்மையுடையவை. காணப்படும் நிறங்கள்: கறுப்பு, பழுப்பு, சாம்பல், செம்மஞ்சள் முதல் மஞள் வரை, பெரோவிசுக்கைட்டுகள் கனசதுர அமைப்பு கொண்டவை போன்ற தோற்றம் தருபவை, ஆனால் அவை போலி கனசதுர அமைப்புடையவை. கால்சியம் தைட்டனேட்டு போன்ற ஆர்த்தோராம்பிக்கு (orthorhombic) படிகவகையில் படிகமுறும். பெரோவிசுக்கைட்டுப் படிகங்கள் கலீனா (galena) என்பதோடு குழப்பம் கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் கலீனா குடுதலான மாழைபோன்ற பளபளப்பும் அதிக அடர்த்தியும் திருத்தமான பிளவுகளும் உண்மையான கனசதுர ஒற்றொருமை (symmetry) அமைப்பும் கொண்டவை.[7]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:Titanium minerals வார்ப்புரு:Titanium compounds வார்ப்புரு:Calcium compounds

  1. வார்ப்புரு:Cite book
  2. வார்ப்புரு:Cite journal
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Webmin என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. வார்ப்புரு:Cite journal
  5. வார்ப்புரு:Cite journal
  6. வார்ப்புரு:Cite journal
  7. வார்ப்புரு:Cite journalவார்ப்புரு:Dead link
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பெரோவிசுக்கைட்டு&oldid=1474" இலிருந்து மீள்விக்கப்பட்டது