காலியம்(I) ஆக்சைடு

testwiki இலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 02:23, 5 பெப்ரவரி 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:ஆக்சைடுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox காலியம்(I) ஆக்சைடு (Gallium(I) oxide) Ga2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இரு காலியம் ஓராக்சைடு, டைகாலியம் மோனாக்சைடு, காலியம் கீழாக்சைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு

வெற்றிடத்தில் சூடாக்கப்பட்ட காலியத்தை காலியம்(III) ஆக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதால் காலியம்(I) ஆக்சைடு உருவாகிறது.[1]

Ga2O3+4 Ga3 Ga2O

காலியத்தை கார்பனீராக்சைடுடன் சேர்த்து வெற்றிடத்தில் 850 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினாலும் காலியம்(I) ஆக்சைடு உருவாகிறது.[2]

2 Ga+CO2Ga2O+CO

காலியம் ஆர்சனைடு சீவல்கள் தயாரிக்கையில் ஓர் உடன் விளைபொருளாகவும் காலியம்(I) ஆக்சைடு உருவாகிறது. :[3][4]

4 Ga+SiO22 Ga2O+Si

பண்புகள்

காலியம்(I) ஆக்சைடு பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தினாலான எதிர்காந்த பண்பு கொண்ட ஒரு திடப்பொருளாகும். வறண்ட காற்றில் மேலும் ஆக்சிசனேற்றம் நிகழாமல் இச்சேர்மம் தடுக்கும். 500 ° செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் காலியம்(I) ஆக்சைடு சிதைவடையத் தொடங்குகிறது. இச்சிதைவு விகிதம் வெற்றிடம், மந்த வாயு, காற்று போன்ற வளிமண்டலச் சூழல்களைப் பொறுத்து அமைகிறது.[1]

மேற்கோள்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=காலியம்(I)_ஆக்சைடு&oldid=1483" இலிருந்து மீள்விக்கப்பட்டது