சீசியம் ஓசோனைடு

testwiki இலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:21, 3 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (<references />-----{{Reflist}} using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

சீசியம் ஓசோனைடு (Caesium ozonide) என்பது சீசியத்தின் ஆக்சிசன் மிகுதி சேர்மமாகும்.CsO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது. ஓசோனைடு என வகைப்படுத்தப்படும் இச்சேர்மத்தில் ஓசோனைடு எதிர்மின் அயனியும் (O 3 - ) சீசியம் நேர்மின் அயனியும் உள்ளன. சீசியம் சூப்பர் ஆக்சைடுடன் ஓசோனை வினைபுரியச் செய்வதன் மூலம் இதை உருவாக்கலாம்:

CsOA2+OA3CsOA3+OA2

இந்த சேர்மமானது காற்றில் உள்ள எந்த தண்ணீருடனும் வினை புரிந்து சீசியம் ஐதராக்சைடை உருவாக்குகிறது.[1]

2CsOA3+HA2O2CsOH+52OA2

70 முதல் 100 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடுபடுத்தினால்  சீசியம் ஓசோனைடு சீசியம் சூப்பர் ஆக்சைடாக (CsO 2 ) விரைவில் சிதைவடையும்.[1] உண்மையில் இச்சேர்மம் சீசியம் சூப்பர் ஆக்சைடாக சிதைந்து மேலும் அறை வெப்பநிலையில் மெதுவாக சிதைகிறது. ஆனால் -20 பாகை செல்சியசு வெப்பநிலையில் சேமிக்கப்பட்டால் பல மாதங்கள் அப்படியே இருக்கும்.[2]

சுமார் 8 பாகை செல்சியசு வெப்பநிலையில் சீசியம் குளோரைடு படிக அமைப்பு வகையைச் சேர்ந்தது. குளோரைடு அயனிக்கு பதிலாக இங்கு ஓசோனைடு அயனி உள்ளது. குறைந்த வெப்பநிலையில், இப் படிக அமைப்பு P2<sub>1</sub>/c இடக்குழுவைக் கொண்ட ருபிடியம் ஓசோனைடு (RbO 3 ) கட்டமைப்பு போன்ற ஒரு கட்டமைப்பிற்கு மாறுகிறது.[3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:சீசியம் சேர்மங்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சீசியம்_ஓசோனைடு&oldid=1515" இலிருந்து மீள்விக்கப்பட்டது