உருபீடியம் ஓசோனைடு

testwiki இலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 10:31, 15 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

உருபீடியம் ஓசோனைடு (Rubidium ozonide) என்பது ஆக்சிசன் மிகுதியாக இடம்பெற்றுள்ள உருபீடியம் சேர்மமாகும். RbO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது. ஓசோனைடு வகை சேர்மமான இதில் உருபீடியம் நேர்மின் அயனியும் ஓசோனைடு எதிர்மின் அயனியும் உள்ளன.

உருபீடியம் சூப்பர் ஆக்சைடுடன் ஓசோனைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இதை உருவாகலாம் [1]

RbOA2+OA3RbOA3+OA2

இரண்டு வகையான படிக வடிவங்களில் உருபீடியம் ஓசோனைடு உருவாகிறது. குறைந்த வெப்பநிலையில் α-RbO3 (P21 இடக்குழு) [2] மற்றும் β-RbO3 (இடக்குழு P21/c)[3] என்ற இரண்டு மாற்றியன்கள் உருவாகின்றன. விரிவான கட்டமைப்பு பகுப்பாய்வுகள், சுற்றியுள்ள உருபீடியம் அணுக்களில் இருந்து ஓசோனைடு எதிர்மின் அயனிகள் குறிப்பிடத்தக்க அளவில் மையமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன.[4]

ஓசோனைடு அயனி காந்தத் தன்மை கொண்டது என்பதால், உருபீடியம் ஓசோனைடின் எலக்ட்ரான் பாரா காந்த அதிர்வு அளவீடுகள் ஓசோனைடு எதிர்மின் அயனியின் அகச்சிவப்பு கதிர்வீச்சின் அளவுகளைத் (ஜி-மதிப்பு) தீர்மானிக்கின்றன.[5]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:ருபீடியம் சேர்மங்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=உருபீடியம்_ஓசோனைடு&oldid=1516" இலிருந்து மீள்விக்கப்பட்டது