பிளாட்டினம்-சமாரியம்

testwiki இலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 07:12, 22 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:பிளாட்டினம் சேர்மங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox பிளாட்டினம்-சமாரியம் (Platinum-samarium) ஓர் இரும கனிம வேதியியல் சேர்மமாகும். PtSm என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது அடையாளப்படுத்தப்படுகிறது.[1] உலோகங்களிடை சேர்மமான பிளாட்டினம்-சமாரியம் படிகங்களாக உருவாகிறது.

தயாரிப்பு

தூய தனிமங்கள் விகிதவியல் அளவுகளில் இணைந்து இரும பிளாட்டினம்-சமாரியம் உருவாகிறது.

𝖯𝗍+𝖲𝗆 1810oC 𝖲𝗆𝖯𝗍

Pnma என்ற இடக்குழுவில் அலகு அளபுருக்கள் a = 0.7148 நானோமீட்டர், b = 0.4501 நானோமீட்டர், c = 0.5638 நானோமீட்டர், Z = 4, என்ற அளவுகளில் இரும்பு போரைடின் (FeB) கட்டமைப்பை ஒத்த சாய்சதுரக் கட்டமைப்பில் பிளாட்டினம்-சமாரியம் படிகமாகிறது.

≈1810 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிளாட்டினம்-சமாரியம் உருகும்.[2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist