பிசுமத் பாசுபைடு

testwiki இலிருந்து
imported>Nan பயனரால் செய்யப்பட்ட 12:19, 5 சனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox பிசுமத் பாசுபைடு (Bismuth phosphide) என்பது BiP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத்தும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு

சோடியம் பாசுபைடும் தொலுயீனிலுள்ள (0 பாகை செல்சியசு) பிசுமத் முக்குளோரைடும் வினையில் ஈடுபட்டு பிசுமத்து பாசுபைடு சேர்மத்தை உருவாக்குகின்றன. :[3]

NaA3P+BiClA3BiP+3NaCl

இயற்பியல் பண்புகள்

பிசுமத் பாசுபைடு காற்றில் எரியும். கார்பனீராக்சைடு சூழலில் சூடாக்கப்படும் போது படிப்படியாக பாசுபரசு ஆவியாகும் தன்மை காணப்படுகிறது.

வேதியியல் பண்புகள்

நீருடன் சேர்த்து பிசுமத் பாசுபைடை கொதிக்க வைத்தால் பிசுமத் பாசுபைடு ஆக்சிசனேற்றம் அடைகிறது. வலிய அமிலங்கள் அனைத்திலும் பிசுமத் பாசுபைடு கரையும்.

பயன்கள்

உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் பிசுமத் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:பிசுமத் சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபரசு சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபைடுகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பிசுமத்_பாசுபைடு&oldid=1532" இலிருந்து மீள்விக்கப்பட்டது