எர்பியம்(III) நைட்ரேட்டு

testwiki இலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 08:07, 5 பெப்ரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

எர்பியம்(III) நைட்ரேட்டு (Erbium(III) nitrate) Er(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும். ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எர்பியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3] எர்பியத்தின் நைட்ரேட்டு உப்பான இது இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாகப் படிகமாகிறது. எர்பியம் நைட்ரேட்டு உப்பு படிக நீரேற்றுகளாகவும் உருவாகிறது.[4][5]

தயாரிப்பு முறை

எர்பியம் உலோகத்தை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து எர்பியம் நைட்ரேட்டு தயாரிக்கலாம்.

𝖤𝗋+𝟨𝖧𝖭𝖮𝟥  𝖤𝗋(𝖭𝖮𝟥)𝟥+𝟥𝖭𝖮𝟤+𝟥𝖧𝟤𝖮

எர்பியம் ஆக்சைடு அல்லது ஐதராக்சைடை நைட்ரிக் அமிலத்தில் கரைத்தும் இதைத் தயாரிக்கலாம்.

𝖤𝗋(𝖮𝖧)𝟥+𝟥𝖧𝖭𝖮𝟥  𝖤𝗋(𝖭𝖮𝟥)𝟥+𝟥𝖧𝟤𝖮

நைட்ரசன் ஈராக்சைடை எர்பியம் உலோகத்துடன் வினைபுரியச் செய்தும் எர்பியம் நைட்ரேட்டு தயாரிக்கலாம்.

𝖤𝗋+𝟥𝖭𝟤𝖮𝟦  𝖤𝗋(𝖭𝖮𝟥)𝟥+𝟥𝖭𝖮

இயற்பியல் பண்புகள்

எர்பியம்(III) நைட்ரேட்டு இளஞ்சிவப்பு நிற நிருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது.

எர்பியம்(III) நைட்ரேட்டும் இதன் நீரேற்றுப் படிகமும் சூடாக்கினால் சிதைவடைகின்றன. தண்ணீர் மற்றும் எத்தனாலில் எர்பியம்(III) நைட்ரேட்டு கரையும்.[6]

வேதிப் பண்புகள்

நீரேற்ற எர்பியம் நைட்ரேட்டு வெப்பத்தால் சிதைவடைந்து முதலில் ErONO3 ஆகவும் பின்னர் எர்பியம் ஆக்சைடாகவும் மாறுகிறது.

பயன்பாடு

உலோக எர்பியம் தயாரிக்கவும் ஒரு வினையாக்கியாகவும் எர்பியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:எர்பியம் சேர்மங்கள் வார்ப்புரு:நைத்திரேட்டுகள்