சமாரியம் ஆர்சனைடு
சமாரியம் ஆர்சனைடு (Samarium arsenide) என்பது SmAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இரும கனிமச் சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
வெற்றிடத்தில் தூய சமாரியம், ஆர்சனிக்கு தனிமங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் சமாரியம் ஆர்சனைடு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
Fm3m என்ற இடக்குழுவில், a = 0.5921 nm, Z = 4, என்ற அலகு அளபுருபுகளுடன் சோடியம் குளோரைடு கட்டமைப்பில் [2][3] கனசதுர படிகமாக சமாரியம் ஆர்சனைடு படிகமாகிறது.[4]
2257 ° செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் ஆர்சனைடு உருகத் தொடங்குகிறது. .
பயன்கள்
ஒரு குறைக் கடத்தியாகவும் ஒளியியல் பயன்பாடுகளுக்காவும் சமாரியம் ஆர்சனைடு பயன்படுத்தப்படுகிறது.[5]