மாங்கனீசு லாக்டேட்டு
மாங்கனீசு லாக்டேட்டு (Manganese lactate) என்பது Mn(C3H5O3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1] இளஞ்சிவப்பு நிற படிக நீரேற்றாக உருவாகும் இவ்வுப்பு நீரில் நன்றாக கரையும்.[2][3]
தயாரிப்பு
மாங்கனீசு கார்பனேட்டை லாக்டிக் அமிலத்தில் கரைத்தால் மாங்கனீசு லாக்டேட்டு உருவாகிறது:
இயற்பியல் பண்புகள்
மாங்கனீசு லாக்டேட்டு வெளிர் இளஞ்சிவப்பு படிகங்களாக உருவாகிறது.
நீர் மற்றும் எத்தனாலில் கரைகிறது.
Mn(C3H5O3)2•n H2O என்ற பொது வாய்ப்பாட்டிலான படிக நீரேற்றுகளாக மாங்கனீசு லாக்டேட்டு காணப்படுகிறது. இவ்வாய்ப்பாட்டில் உள்ள n = 2 மற்றும் 3 ஆகும்.[4]