புனர்பூசம் (நட்சத்திரம்)

testwiki இலிருந்து
imported>Balu1967 பயனரால் செய்யப்பட்ட 13:29, 30 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

புனர்பூசம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஏழாவது நட்சத்திரம் ஆகும். Castor மற்றும் Pollux என்று மேற்கத்திய உலகத்தில் வழக்கிலிருக்கும் பெயர்களால் அறியப்படும் இந்த இரண்டு நட்சத்திரங்களை புனர்பூசம் என்று இந்திய மரபில் சொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஜனவரி 15 தேதிகளில் 11-30 மணி அளவிலும் இரண்டு மாதம் முன்னமேயே காலை 3-30 மணியளவிலும், இன்னும் மற்ற நாட்களில் அட்டவணைப்படியும் இவைகளைக் காணலாம். பொதுவாக டிசம்பரிலிருந்து மே வரையில் இதைப்பார்க்கலாம். இதனுடைய அறிவியற்பெயர் α and β Geminorum. இந்திய வானியலின் மரபுப்படியும் ஜோதிடமரபுப்படியும் இது முதல் மூன்று பாதங்கள் மிதுனராசியிலும் நான்காம் பாதம் கடக இராசியிலும் கணக்கிடப்படுகிறது. 'மிதுனம்' என்றாலே இரட்டை என்றுதான் பொருள்.

அறிவியல் விபரங்கள்

இரண்டு நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு ஒரே அளவு பிரகாசமாக இருந்தாலும் , Pollux ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஒற்றை நட்சத்திரம். Castor மட்டுமே இரண்டு நட்சத்திரங்களுக்குமேல் கொண்டது. அதனில் முக்கியமாக இரண்டு நட்சத்திரங்கள் நீலநிறத்தைக் காட்டுபவை. அவைகளினுடைய ஒளியளவு 1.9, மற்றும் 2.9.

இரவில் மணி அறிதல்

இரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் புனர்பூசம் குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

ஓடறு புனர்மீன் ஓடங்கோலரை

புனர்பூசம் உச்சவட்டத்திற்கு வரும்போது கோலில், அதாவது, துலாராசி, உதித்து அரை நாழிகை ஆகிறது என்பது பாட்டின் பொருள்.

தை மாதம் 15 ம் நாள் நாம் புனர்பூசத்தை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். புனர்பூசமே இரண்டு தனித்தனி நட்சத்திரங்களாக இருப்பதால், உச்சத்தில் பார்ப்பது என்பது ஒரு தோரயமாகத்தான் சொல்லமுடியும். அன்று சூரியன் மகரராசியின் மையத்தில் இருக்கிறது. கீழ்த் தொடுவானத்திற்கும் சூரியனுக்கும் இடச் சுழிதூரத்தை இப்படி கணக்கிடலாம். துலா ராசியில் 4 1/2, விருச்சிகராசியில் 5, தனுசுராசியில் 5, மகரத்தில் 2 1/2 ஆக மொத்தம் 17நாழிகை. 1 நாழிகை = 24 நிமிடங்கள். அதனால், சூரியன் உதிப்பதற்கு இன்னும் 6 மணி 48 நிமிடங்கள் உள்ளன. ஆதலால் அப்போதைய நேரம் ஏறக்குறைய 11-12 P.M. இதே முறையில் மற்ற நாட்களிலும் கணக்கிட்டுக் கொள்ளலாம். கீழுள்ள அட்டவணையில் மாதிரிக்காக சில நாட்கள் காட்டப்பட்டிருக்கின்றன.

புனர்பூசத்தை உச்ச வட்டத்தில்

பார்க்கும் இரவு

சூரியன் இராசிச்சக்கரத்தில்

இருக்கும் இடம்

வாய்பாட்டிலிருந்து

கணிக்கப்பட்ட நேரம் (ஏறக்குறைய)

ஐப்பசி 15 துலாராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

5-12 A.M.
கார்த்திகை15 விருச்சிக ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

3-12 A.M.
மார்கழி 15 தனுசு ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

1-12 A.M.
தை 15 மகர ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

11-12 P.M.
மாசி 15 கும்ப ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

9-12 P.M.
பங்குனி 15 மீன ராசியில் நுழைந்து

15 நாள் ஆனது

7-12 P.M.

இவற்றையும் பார்க்கவும்

துணை நூல்கள்

வார்ப்புரு:பஞ்சாங்கம்