பெரிலியம் ஆக்சலேட்டு
வார்ப்புரு:Chembox பெரிலியம் ஆக்சலேட்டு (Beryllium oxalate) என்பது C2BeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிலியம் உலோகமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. பெரிலியம் ஆக்சலேட்டு நீரில் கரையும். படிக நீரேற்றுகளாகவும் உருவாகும். நிறமற்ற படிகங்களாகக் காணப்படும். வெப்பச் சிதைவின் மூலமாக தூய்மையான பெரிலியம் ஆக்சைடு தயாரிக்க இது பயன்படுகிறது.
தயாரிப்பு
பெரிலியம் ஐதராக்சைடுடன் ஆக்சாலிக் அமிலத்தை நேரடியாகச் சேர்த்து வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக பெரிலியம் ஆக்சலேட்டு தயாரிக்கப்படுகிறது.:[1]
வேதிப் பண்புகள்
பெரிலியம் ஆக்சலேட்டின் படிக நீரேற்றுகளை சூடாக்கினால் நீர் இழப்பு ஏற்படுகிறது.
மேற்கோள்கள்
வார்ப்புரு:Reflist வார்ப்புரு:பெரிலியம் சேர்மங்கள் வார்ப்புரு:Oxalates