பொலோனியம் சல்பைடு

testwiki இலிருந்து
imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 01:53, 19 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சிறு திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

பொலோனியம் சல்பைடு (Polonium sulfide) என்பது PoS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. பொலோனியமும் கந்தகமும் சேர்ந்து இந்த கனிமச் சேர்மம் உருவாகிறது.[1] கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் சல்பைடு கதிரியக்கப் பண்பு கொண்டதாகும்.[2]

தயாரிப்பு

1. பொலோனியம்(II) உப்புகளின் அமைலக் கரைசலில் ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தினால் பொலோனியம் சல்பைடு உருவாகிறது:[3][4]

PoClA2+HA2SPoS+2HCl

2. அமோனியம் சல்பைடின் நீரியக் கரைசலுடன் பொலோனியம்(II) ஐதராக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொலோனியம் சல்பைடு கிடைக்கிறது:

(NHA4)A2S+Po(OH)A22NHA3+2HA2O+PoS

பண்புகள்

இயற்பியல் பண்புகள்

கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் பொலோனியம் சல்பைடு தண்ணீரில், எத்தனால், அசிட்டோன், தொலுயீன், அமோனியம் சல்பைடு போன்ற கரைப்பான்களில் கரையாது.

வேதிப்பண்புகள்

பொலோனியம் சல்பைடு வலுவான குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. குளோரின் நீர், புரோமின் நீர், சோடியம் ஐப்போகுளோரைட்டு மற்றும் இராச திராவகம் போன்ற வேதிப் பொருள்களால் ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. பொலோனியம் சல்பைடு வெப்பமாக்கினால் சிதைகிறது. வெற்றிடத்தில் 274.85°செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது தனிம பொலோனியம், தனிம கந்தகமாக சிதைகிறது:[5]

PoSPo+S

அடர் அமிலங்களுடன் கீழ்கண்டவாறு வினையில் ஈடுபடுகிறது:

PoS+2HClPoClA2+HA2S

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பொலோனியம்_சல்பைடு&oldid=1569" இலிருந்து மீள்விக்கப்பட்டது