நையோபியம் பாசுபைடு

testwiki இலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 05:26, 16 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:நையோபியம் சேர்மங்கள்; added Category:நையோபியம்(III) சேர்மங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox நையோபியம் பாசுபைடு (Niobium phosphide) என்பது NbP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நையோபியமும் பாசுபரசும் சேர்ந்து வினைபுரிந்து நையோபியம் பாசுபைடு உருவாகிறது.

தயாரிப்பு

நையோபியத்தையும் சிவப்பு பாசுபரசையும் சேர்த்து சுட்டால் நையோபியம் பாசுபைடு உருவாகிறது.

Nb+PNbP

இயற்பியல் பண்புகள்

இச்சேர்மம் இடத்தியல் மற்றும் வழக்கமான மின்னணு நிலைகளை இணைக்கும் ஒரு தனித்துவமான பொருளாகும். இதன் அதிவிரைவு எலக்ட்ரான்கள் மிகப் பெரிய காந்தத் தன்மையைக் காட்டுகின்றன. எனவே NbP புதிய மின்னணுக் கூறுகளில் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும்.[2]

நையோபியம் பாசுபைடு நாற்கோணக வடிவத்தில் I 41md என்ற இடக்குழுவில் a = 0.3334 நானோமீட்டர், c = 1.1378 நானோமீட்டர், Z = 4 என்ற அளவுருக்களில் கருஞ்சாம்பல் நிறப் படிகங்களாக நையோபியம் பாசுபைடு உருவாகிறது.[3]

தண்ணீரில் இது கரையாது.

டாண்டலம் ஆர்சனைடு போல நையோபியம் பாசுபைடு ஒர் அரை உலோகமாக உள்ளது.[4][5]

பயன்

அதிக சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் பயன்படுத்தப்படும் ஒரு குறைகடத்தியாக லிதேத்தியம் பாசுபைடு பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:நையோபியம் சேர்மங்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=நையோபியம்_பாசுபைடு&oldid=1576" இலிருந்து மீள்விக்கப்பட்டது