காண்பமைவு (வடிவவியல்)

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 14:28, 17 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (பெயரியல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
இரு காண்பமைவுகொண்ட முக்கோணங்களும் அவற்றின் காண்பமைவு மையம் மற்றும் காண்பமைவு அச்சு.

ஒரு தளத்திலமைந்த இரு வடிவங்களின் ஒத்த புள்ளிகளை இணைக்கும் கோடுகள் ஒரு புள்ளியில் சந்தித்தால் அவ்வடிவங்கள் இரண்டும் அச்சந்திக்கும் புள்ளியிலிருந்து காண்பமைவு (perspective) உடையவை என வரையறுக்கப்படுகிறது. அச் சந்திக்கும் புள்ளி காண்பமைவு மையம் (perspective center) என அழைக்கப்படுகிறது.

வீழ்ப்பு வடிவவியலில், இரு வடிவங்களின் ஒத்த கோடுகள் சந்திக்கும் புள்ளிகள் எல்லாம் ஒரே கோட்டிலமைந்தாலும் அவ்விரு வடிவங்களும் அக்கோட்டிலிருந்து காண்பமைவு கொண்டவையாக வரையறுக்கப்படுகிறது. அக் கோடு காண்பமைவு அச்சு (perspective axis) எனவும் அழைக்கப்படும். வீழ்ப்பு வடிவவியலில் எல்லாக் கோடுகளும் வெட்டும்கோடுகளாக இருக்குமாதலால் இந்த வரையறை வீழ்ப்பு வடிவவியலில் சாத்தியமாகிறது.

காண்பமைவின் கருத்துரு தளத்தில் வரையறுக்கப்பட்டாலும் அதனை உயர்பரிமாணங்களுக்கும் நீட்டிக்கலாம்.

பெயரியல்

இரு வடிவங்களின் ஒத்தபக்கங்கள் சந்திக்கும் புள்ளிகள் எல்லாவற்றின் வழியாகச் செல்லும் கோடு காண்பமைவு அச்சு அல்லது காண்பமைவின் அச்சு எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வடிவங்கள், இவ்வச்சிலிருந்து காண்பமைவானவை எனப்படுகின்றன. காண்பமைவு வடிவங்களின் ஒத்த உச்சிகளை இணைக்கும் கோடுகள் சந்திக்கும் புள்ளி காண்பமைவு மையம் அல்லது காண்பமைவின் மையம் என அழைக்கப்படுகிறது. இவ்வடிவங்கள் இம்மையத்திலிருந்து காண்பமைவு கொண்டவை எனப்படுகின்றன.[1]

குறியீடு

செருமானியக் கணிதவியலாளர் கார்ல் வோன் இசுட்டாட் (Karl von Staudt) முக்கோணங்கள் ABC , abc இரண்டும் காண்பமைவானவை என்பதைக் குறிக்க ABCabc என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தினார்.[2]

குறிப்புகள்

வார்ப்புரு:Reflist

மேற்கோள்கள்