பொட்டாசியம் பெர்யிரேனேட்டு
பொட்டாசியம் பெர்யிரேனேட்டு (Potassium perrhenate) என்பது KReO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.
தயாரிப்பு
பொட்டாசியம் ஐதராக்சைடுடன் பெர் இரேனிக் அமிலத்தைச் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக பொட்டாசியம் பெர்யிரேனேட்டு தயாரிக்கப்படுகிறது. [1]
பண்புகள்
வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாக பொட்டாசியம் பெர்யிரேனேட்டு காணப்படுகிறது. எத்தனால் அல்லது நீரில் சிறிதளவு கரையும். I41/a (எண். 88) என்ற இடக்குழுவுடன் a = 567.4 பைக்கோமீட்டர் மற்றும் c = 1266.8 பைக்கோமீட்டர் என்ற அளபுருக்களும் கொண்ட நாற்கோண படிக கட்டமைப்பை ஏற்கிறது.[1] இச்சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.