மக்னீசியம் ஓசோனைடு
மக்னீசியம் ஓசோனைடு (Magnesium ozonide) என்பது MgO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] மற்ற ஓசோனைடு சேர்மங்களைப் போலல்லாமல், மக்னீசியம் ஓசோனைடு வழக்கமான சிவப்பு நிறத்திற்குப் பதிலாக வெண்மை நிறத்திலுள்ளது. தாழ் வெப்பநிலைகளில் மட்டும் மக்னீசியம் ஓசோனைடு நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது.[2]
தயாரிப்பு
-259 ° செல்சியசு வெப்பநிலையில் உள்ள மக்னீசியத்தின் மீது ஓசோனும் நைட்ரசன் வாயுவும் கலந்த கலவையை செலுத்துவதன் மூலம் மக்னீசியம் ஓசோனைடை உருவாக்கலாம்.
மக்னீசியம் பிசுஓசோனைடு
ஆர்கான் அச்சில் ஆர்கான் அல்லது கார்பன் மோனாக்சைடுடன் Mg(O3)2 என்ற கட்டமைப்பில் சிக்கலான பிசுஓசோனைடு அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ வார்ப்புரு:Cite book
- ↑ Wang, Guanjun & Gong, Yu & Zhang, Qingqing & Zhou, Mingfei. "Formation and Characterization of Magnesium Bisozonide and Carbonyl Complexes in Solid Argon". The journal of physical chemistry. A. 114 (2010). 10803-9. https://www.researchgate.net/publication/46392397_Formation_and_Characterization_of_Magnesium_Bisozonide_and_Carbonyl_Complexes_in_Solid_Argon