பாதரசம்(II) சிடீயரேட்டு

testwiki இலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 02:17, 13 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

பாதரசம்(II) சிடீயரேட்டு (Mercury(II) stearate) C36H70HgO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என பாதரசம்(II) சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[2] உள்ளிழுத்தல், உட்செலுத்துதல் மற்றும் தோல் உறிஞ்சுதல் ஆகியன நேரிட்டால் இச்சேர்மம் மிகவும் நச்சுத்தன்மையுடையது.

தயாரிப்பு

பாதரசம்(II) குளோரைடுடன் சோடியம் சிடீயரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்யும்போது பரிமாற்ற வினையில் பாதரசம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.

𝖧𝗀𝖢𝗅𝟤+𝟤𝖢𝟣𝟩𝖧𝟥𝟧𝖢𝖮𝖮𝖭𝖺  𝖧𝗀(𝖢𝟣𝟩𝖧𝟥𝟧𝖢𝖮𝖮)𝟤+𝟤𝖭𝖺𝖢𝗅

மெர்குரியசு ஆக்சைடை சிடீயரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினாலும் பாதரசம்(II) சிடீயரேட்டு கிடைக்கும்.[3]

இயற்பியல் பண்புகள்

மஞ்சள் நிற மெழுகுப் பொருளாக பாதரசம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.[4]

கொழுப்பு எண்ணெய்களில் கரையும். நீர் அல்லது ஆல்ககாலில் கரையாது.[5]

பயன்கள்

பாதரசம்(II) சிடீயரேட்டு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது.[5] பீங்கான் உற்பத்தியில் ஒரு நெகிழியாக்கியாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:பாதரச சேர்மங்கள்