நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு

testwiki இலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 11:36, 22 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு (Neptunium(IV) oxalate) Np(Cவார்ப்புரு:SubOவார்ப்புரு:Sub)வார்ப்புரு:Sub என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] [2] நெப்டியூனியமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு தண்ணீரில் சிறிதளவு கரையும். பச்சை நிறத்தில் படிக நீரேற்றாக உருவாகும்.[3][4]

தயாரிப்பு

நெப்டியூனியம்(IV) கரைசல்களை ஆக்சாலிக் அமிலத்துடன் சேர்த்து வீழ்படிவாக்கல் வினை மூலம் நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டைத் தயாரிக்கலாம்:[5]

𝖭𝗉𝖢𝗅𝟦+𝟤𝖧𝟤𝖢𝟤𝖮𝟦  𝖭𝗉(𝖢𝟤𝖮𝟦)𝟤𝟨𝖧𝟤𝖮+𝟦𝖧𝖢𝗅

இயற்பியல் பண்புகள்

நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு Np(C2O4)2 • 6H2O என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டிலான பச்சைநிற படிக நீரேற்றாக உருவாகிறது.

தண்ணீரில் சிறிதளவு கரையும். அசிட்டோனில் கரையாது.[6]

வேதிபண்புகள்

நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டை சூடுபடுத்தினால் சிதைவடையும்:[7]

𝖭𝗉(𝖢𝟤𝖮𝟦)𝟤 400oC 𝖭𝗉𝖮𝟤+𝟤𝖢𝖮𝟤+𝟤𝖢𝖮

பயன்கள்

நெப்டியூனியத்தை தூய்மையாக்கும் செயல்முறையில் நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு இடைநிலை வேதிப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[8][9]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:நெப்டியூனியம் சேர்மங்கள்