இரேனியம்(IV) குளோரைடு

testwiki இலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 14:26, 17 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:இரேனியம் சேர்மங்கள்; added Category:இரேனியம்(IV) சேர்மங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

இரேனியம்(IV) குளோரைடு (Rhenium(IV) chloride) ReCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிற சேர்மமான இது ஓர் இருமநிலை சேர்மமாக கருதப்படுகிறது. ஆனால் நடைமுறையில் சிறிதளவே இந்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ReCl4 இன் இரண்டாவது பல்லுருத்தோற்றமும் அறியப்படுகிறது.[1]

தயாரிப்பு

இனியம்(V) குளோரைடு மற்றும் இரேனியம்(III) குளோரைடு ஆகிய ஒரே தனிமம் வெவ்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளிலுள்ள இரண்டு சேர்மங்கள் தங்களுக்குள் வினைபுரிந்து இடைநிலை ஆக்சிசனேற்ற நிலை எண்ணைக் கொண்ட சேர்மமான இரேனியம்(IV) குளோரைடு சேர்மத்தை உருவாக்குகின்றன.[2]

2 ReCl5+SbCl32 ReCl4+SbCl5

120 °செல்சியசு வெப்பநிலையில் டெட்ராகுளோரோயெத்திலீன் சேர்மமும் நல்ல குறைப்பானாகப் பயன்படுகிறது:

2 ReCl5+C2Cl42 ReCl4+C2Cl6

கட்டமைப்பு

எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் ஒரு பல்லுருவக் கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றன. Re–Re பிணைப்புகளுக்கு இடையிலான தூரம் 2.728 Å ஆகும். இரேணியம் அணுக்கள் ஆறு குளோரைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்ட எண்முக தோற்றத்திலுள்ளன. இரண்டு எண்கோணங்கள் இம்முகங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன். Re2Cl9 துணைக்குழுக்கள் குளோரைடு ஈந்தணைவிகளுடன் பாலம் அமைப்பதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கட்டமைப்பின் மையக்கருத்து - மூலை-பகிர்வு ஈரெண்முகம் - இரும உலோக ஆலைடுகளில் அசாதாரணமானதாகும். [1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:இரேனியம் சேர்மங்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இரேனியம்(IV)_குளோரைடு&oldid=1668" இலிருந்து மீள்விக்கப்பட்டது