மையப்படுத்தப்பட்ட இருபதுமுக எண்

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 15:19, 5 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (துவக்கம். Centered icosahedral number-தமிழாக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox integer sequence மையப்படுத்தப்பட்ட இருபதுமுக எண்கள் (centered icosahedral numbers) மற்றும் எண்சதுரமுக எண்கள் (cuboctahedral numbers) ஆகிய இரண்டும் ஒரே எண் தொடர்வரிசையைக் குறிக்கும் இரு வெவ்வேறு பெயர்களாகும். இவை இரண்டு வெவ்வேறு முப்பரிமாண வடிவ உருவகிப்புகளைக் கொண்ட வடிவ எண்களாகும். மையப்படுத்தப்பட்ட இருபதுமுக எண்கள், இருபதுமுகி வடிவிலமைக்கப்பட்டப் புள்ளிகளைக் குறிக்கும் மையப்படுத்தப்பட்ட பலகோண எண்களாகும். எண்சதுரமுக எண்கள், எண்சதுரமுகியின் வடிவிலமைக்கப்பட்டப் புள்ளிகளைக் குறிக்கும் வடிவ எண்களாகவும் கனசதுரப் படிகமுறையின் மாய எண்ணாகவும் உள்ளன.

n ஆவது மையப்படுத்தப்பட்ட இருபதுமுக எண்ணுக்கான வாய்பாடு:

(2n+1)(5n2+5n+3)3.

இவற்றில் முதலில் வரும் எண்கள் சில:

1, 13, 55, 147, 309, 561, 923, 1415, 2057, 2869, 3871, 5083, 6525, 8217, ... (வார்ப்புரு:OEIS)

மேற்கோள்கள்

வார்ப்புரு:வடிவ எண்கள்