சயனோ அசிட்டிலீன்
சயனோ அசிட்டிலீன் (Cyanoacetylene) என்பது C3HN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இது ஓர் எளிமையான சயனோபாலியின் சேர்மம் ஆகும். அலைமாலை ஆய்வு முறைகளால் விண்மீன் மேகங்களில் சயனோ அசிட்டிலீன் இருப்பது அறியப்படுகிறது.[1] ஏல்-பாப் வால்வெள்ளி என்ற வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதியிலும், சனியின் சந்திரனான டைட்டனின் வளிமண்டலத்திலும் சயனோ அசிட்டிலீன் காணப்படுகிறது. [2] சில சமயங்களில் டைட்டனில் இது விரிந்த மூடுபனி போன்ற மேகங்களை உருவாக்குகிறது.[3]
மில்லர்-உரே பரிசோதனையில் தோன்றும் மூலக்கூறுகளில் சயனோ அசிட்டிலீன் சேர்மமும் ஒன்றாகும்.[4]
- :
இதையும் காண்க
- ஐதரசன் சயனைடு, H−C≡N