இரத்த அளவு

testwiki இலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 11:42, 4 பெப்ரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மனிதர்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இரத்த அளவு (volemiya) என்பது ஒரு நபரின் இரத்த ஓட்ட அமைப்பில் இரத்தத்திலுள்ள குருதி உயிரணுக்களின் அளவும் குருதி நீர்மத்தின் அளவும் ஆகும்.

மனிதர்கள்

ஒரு சராசரி வயது வந்தவருக்கு தோராயமாக 5 லிட்டர் இரத்த அளவு உள்ளது. பெண்களும், ஆண்களும் அவர்களின் எடையில் தோராயமாக ஒரே இரத்த விகிதத்தைக் கொண்டுள்ளனர்.(7 முதல் 8% வரை) இரத்த அளவு சிறுநீரகங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.[1][2]

இரத்தத்தின் அளவு (BV) இரத்தத்தின் ஒரு பகுதியான செங்குருதியணு அணுக்களின் அளவு, குருதி நீர்மத்தின் அளவு (PV) ஆகியவற்றுடன் இரத்த ஆக்சிஜன் உள்ளடக்க ஒழுங்குமுறை வழியாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

BV=PV1HC

இதயச் செயலிழப்பு, நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழவு, முக்கியமான பராமரிப்பு உள்ளவர்கள் போன்றோருக்கு இரத்த அளவை அளவிட்டு பயன்படுத்தப்படலாம்.

இரத்த சுத்திகரிப்பின் போது இரத்த அளவு மாற்றங்களின் பயன்பாடு கேள்விக்குரிய பயன்பாடாகும் .[3]


விலங்கு இரத்த அளவு (மில்லி/கிலோ) [4]
பூனை 55 (47-66)
மாடு 55 (52-57)
நாய் 86 (79-90)
மரநாய் 75
வெள்ளெலி 67
ஆடு 70
கினி எலி 75 (67-92)
வெள்ளெலி 78
குதிரை 76
மனிதர் (ஆண்) 75
மனிதர் (பெண்) 65
செம்முகக் குரங்கு 54
சுண்டெலி 79 (78-80)
வீட்டுப் பன்றி 65
முயல் 56 (44-70)
எலி 64 (50-70)
செம்மறியாடு 60
சிறு குரங்கு 60-70

வலப்புறத்தில் உள்ள அட்டவணை ஆரோக்கியமான பெரியவர்களுக்கும், சில விலங்குகளுக்கும், ஒரு கிலோகிராம் இரத்த ஓட்ட அளவைக் காட்டுகிறது.[4] இருப்பினும், பருமனான, வயதான விலங்குகளில் இது 15% குறைவாக இருக்கலாம்.[4]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இரத்த_அளவு&oldid=1789" இலிருந்து மீள்விக்கப்பட்டது