முதலாவது வெப்ப இயக்கவியல் விதி

testwiki இலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 12:23, 28 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (விளக்கம்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வெப்ப இயக்கவியலில், முதலாவது வெப்ப இயக்கவியல் விதி என்பது, இதனிலும் முழுமையான இயற்பியல் விதியான ஆற்றல் காப்பு விதியின் ஒரு வெளிப்பாடு ஆகும். இவ்விதி பின்வருமாறு கூறுகின்றது:

வார்ப்புரு:Cquote

விளக்கம்

அடிப்படையில், ஒரு வெப்ப இயக்கவியல் முறைமை ஆற்றலைச் சேமிக்க அல்லது கொண்டிருக்க முடியும் என்றும், இந்த ஆற்றல் காக்கப்படுகிறது (conserved) என்றும் கூறுகிறது முதலாவது வெப்ப இயக்கவியல் விதி. இங்கே வெப்பம், பொதுவாக ஒரு உயர் வெப்பநிலையிலுள்ள மூலத்திலிருந்து முறைமைக்குக் கொடுக்கப்படுகின்ற அல்லது குறைந்த வெப்பநிலையிலுள்ள இன்னொன்றுக்கு இழக்கப்படுகின்ற ஆற்றலாகும். அத்துடன், ஒரு முறைமை தனது சூழலில் பொறிமுறை வேலையைச் செய்யும் போதும் ஆற்றலை இழக்கிறது அல்லது மறுதலையாக, சூழலால் இம் முறைமை மீது வேலை செய்யப்படும்போது அது ஆற்றலைப் பெறுகிறது. முதலாவது விதி, இந்த ஆற்றல் காக்கப்படுவதாகக் கூறுகிறது. இவ் விதியைக் கணித அடிப்படையில் பின்வரும் சமன்பாட்டால் குறிக்கலாம்.

dU=δQδw

இங்கே dU என்பது முறைமையிம் உள்ளாற்றலில் ஏற்படும் சிறு மாற்றம். δQ என்பது முறைமைக்குக் கொடுக்கப்பட்ட சிறிய அளவு வெப்பம். δW என்பது முறைமையினால் செய்யப்பட்ட சிறிய அளவு வேலை.