இலப்பிளாசு மாற்று
இலப்பிளாசு மாற்று என்பது வகையீட்டு சமன்பாட்டை இலகுவாக தீர்க்க கூடிய இயற்கணித சமன்பாடாக மாற்றும் கணித செயற்பாடு. கணிதம், இயற்பியல், மின் பொறியியல் கட்டுப்பாட்டியல், குறிகை முறைவழியாக்கம், ஒளியியல் என பல துறைகளில் இது பயன்படுகிறது.[1][2][3]
இலப்பிளாசு மாற்று நேர ஆட்களத்தில் உள்ள சமன்பாட்டை அதிர்வெண் ஆட்களத்துக்கு மாற்றி, அக்களத்தில் எளிய கணித்தல் செயற்பாடுகளை செய்வதை ஏதுவாக்குகிறது.