அளிப்பு விதி

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 19:33, 13 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சந்தையில், நுகர்வோருக்கு கிடைக்கக் கூடிய ஒரு பண்டம் அல்லது சேவையின் மொத்த அளவு அளிப்பு ஆகும். மற்ற காரணிகள் மாறிலியாக உள்ளபோது, ஒரு பண்டம் அல்லது சேவையின் விலை உயர்ந்தால் அளிப்பு உயரும். மாறாக விலை குறைந்தால் அளிப்பு குறையும். இது பொருளியலில் அளிப்பு விதி (law of supply) எனப்படும்.[1] விலைக்கும் அளிப்பிற்குமுள்ள நேரிடை தொடர்பினை இவ்விதி விளக்குகிறது.[2]

கணித வரையறை

அளிப்பு விதி பின்வருமாறு கூறப்படலாம்:

(pp)(yy)0

இங்கு, y என்பது p என்ற விலையில் வழங்கப்படும் ஓர் அளவு; y' என்பது p' என்ற விலையின் வழங்கப்படும் ஓர் அளவு.

எடுத்துக்காட்டாக, p > p' எனில், y > y' .[3]

விளக்கம்

இதனை பின்கண்ட பட்டியல் விளக்குகிறது:

ஒரு பொருளின் விலை ரூபாயில் அளிப்பு (டஜனில்)
5 10
10 20
20 40
30 50

விலை ரூ 5 ஆக இருக்கும்பொழுது அளிப்பின் அளவு 1 டஜனாக உள்ளது, விலை 10 ஆக உயரும்பொழுது அளிப்பின் அளவு 20 டஜன்களாக உள்ளது. இது விலை உயர உயர அளிப்பு உயருகிறது என்பதை காட்டுகிறது. காரணம் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்ந்தால் இலாபம் அதிகரிக்கும் என்பதால் விலை ரூ30 இலிருந்து 20ஆக குறைந்தால் அளிப்பு 50லிருந்து 40 ஆக குறைகிறது. இது விலை குறைய குறைய அளிப்பு குறைகிறது என்பதை காட்டுகிறது. காரணம் உறபத்தியாளர்கள் குறைந்த விலைக்கு பொருளை விற்கும்பொழுது நட்டம் ஏற்படும்

எனவே விலைக்கும் அளிப்பிற்கும் இடையேயுள்ள நேரிடை தொடர்பினை இவ்வ்விதி விளக்குகிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

  1. Mas-Colell, A., Whinston, M. Green, J.: Principles of Microeconomics. Oxford University Press., pg 138. 1995.
  2. Rittenberg, L. & Tregarthen, T.: Microeconomics வார்ப்புரு:Webarchive
  3. Mas-Colell, d., lucrezi, M. Green, J.: Principles of Microeconomics. Oxford University Press., pg 138. 1995.
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=அளிப்பு_விதி&oldid=328" இலிருந்து மீள்விக்கப்பட்டது