எடை

testwiki இலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 05:11, 5 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Hatnote

வார்ப்புரு:Infobox physical quantity2

{{multiple 222 | align 2= right | direction = horizontal

a

Weighing grain, from the 2-namah

2

ஒரு பொருளின் எடை (இலங்கை வழக்கு:நிறை) என்பது அந்த பொருளின் மீது ஈர்ப்பின் காரணமாக ஏற்படக்கூடிய விசையாகும். விதி மற்றும் வர்த்தகத்தின் படி, ஒரு குறிப்பிட்ட பொருளின் எடை என்பது அதன் திணிவைக் குறிக்கலாம். எனினும் அறிவியலில் எடைக்கும் திணிவுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.aa அதன் பரும அளவு (ஒரு அளவீட்டு அளவு), பெரும்பாலும் இட்டாலிக் எழுத்தான W ஆல் குறிக்கப்படும். வார்ப்புரு:Nowrap எனும் வாய்ப்பாட்டின் படி எடை என்பது ஒரு பொருளின் மீது புவி (அல்லது வேறு பொருட்கள்0 கொடுக்கும் வி2சை= பொருளின் திணிவு* புவியீர்ர்ப்2பு ஆர்முடுகல் (புவியில்). எடை என்பது இழுவை மற்றும் தள்ளுகை போல ஒரு வகை விசையே ஆகும். எனவே இதனை விசையை அளக்கும் அலகான நியூட்டனாலேயே அளவிடுவர். புவியில் ஈர்ப்பால் விளையும் ஆர்முடுகல் 9.8 ms−2 ஆகையால் புவியில் ஒரு கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருளின் எடை கிட்டத்தட்ட 9.8 N ஆகும்.[1][2][3]

இரு வேறு கருத்துக்களுடைய இரு வேறு சொற்களான திணிவையும், எடையையும் ஒன்22றென பலர் குழம்பிக் கொள்கின்றனர். அடிப்படையில் எடை ஒரு விசையாகும். எனினும் திணிவு விசையல்ல.

வரையறைகள்

2வார்ப்புரு:Quotation

ஈர்ப்பு வரையறை

அறிமுக இயற்பியல் உரைநூல்களில் மிகவும் பொதுவாக எடைக்கு காணப்படும் வரையறையானது, ஒரு உடல் அமைப்பு மீது ஈர்ப்பு விசை செலுத்தும் விசையே எடை என வரையறுக்கிறது. இது பெரும்பாலும் வார்ப்புரு:Nowrap என்ற சூத்திரத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. இங்க W என்பது எடை, m பொருளின் நிறையையும், g என்பது ஈர்ப்பு முடுக்கத்தையும் குறிக்கிறது.

எடைக்கும் திணிவுக்குமிடையிலான வேறுபாடுகள்

எடையும் திணிவும் ஒன்று போலத் தென்பட்டாலும் இரண்டுக்குமிடையில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. திணிவு என்பது அனைத்துப் பொருட்களினதும் அடிப்படைப் பண்பாகும். திணிவு ஒரு பொருளின் அளவாகும். எனினும் எடை என்பது ஒரு பொருள் மீது இன்னொரு பொருள் ஈர்க்கும் விசையாகும். எடை ஈர்ப்பு விசையால் உண்டாவது. ஈர்ப்பு விசை திணிவால் உண்டாவது. உதாரணமாக 10 kg திணிவுள்ள பொருள் மீது புவி பிரயோகிக்கும் 98N (9.8ms−2 * 10 kg=98N) விசையே எடையாகும்.

திணிவு இடத்துக்கிடம் மாறுபடாது. ஒரு பொருள் எவ்விடத்திலிருந்தாலும் அது அடக்கும் சடப்பொருள் மாறாது- எனவே திணிவும் மாறாது. எனினும் எடை இடத்துக்கிடம் மாறுபடும் இயல்புடையது. பூமியில் இடத்துக்கிடம் புவியீர்ப்பு ஆர்முடுகலில் சிறிய 0.5% வித்தியாசம் காணப்படுகின்றது. பின்வரும் அட்டவணை அவ்வாறு சில இடங்களிலுள்ள புவியீர்ப்பு ஆர்முடுகல் வேறுபாடுகளைக் காட்டுகின்றது. எனவே ஒரு பொருளின் எடை இவ்விடங்களுக்கிடையில் சிறிய வேறுபாட்டைக் காட்டும். எனினும் திணிவு எவ்விடத்திலும் மாற்றமடையாது.

இடம் நிலநேர்க்கோடு புவியீர்ப்பு ஆர்முடுகல் (m/s2)
மத்திய கோடு 9.7803
சிட்னி 33°52′ S 9.7968
அபர்டீன் 57°9′ N 9.8168
வட துருவம் 90° N 9.8322

ஒருவரது புவியில் உள்ள எடையை விட சந்திரனில் எடை குறைவாகும். எனினும் இரு இடங்களிலும் அவரது திணிவு சமமாகும்.

திணிவு ஒரு எண்ணிக்கணியமாகும். விசை ஒரு காவிக்கணியமாகும் (திசை கொண்டது).

சார்பு எடை

இடத்துக்கிடம் ஈர்ப்பு விசையால் உண்டுபண்ணப்படும் ஆர்முடுகல் வேறுபடுவதால், அண்டத்தில் ஒவ்வொரு அண்டப்பொருளும் வேறு பொருட்களில் வெவ்வேறளவான எடையை உருவாக்குகின்றன. புவியிலுள்ள எடையை விட சூரியனில் எடை பல மடங்காகும்.

அண்டப் பொருள் புவியீர்ப்பின் மடங்கு மேற்பரப்பில் ஈர்ப்பு ஆர்முடுகல்
m/s2
சூரியன் 27.90 274.1
புதன் 0.3770 3.703
வெள்ளி 0.9032 8.872
புவி 1 9.8226
சந்திரன் 0.1655 1.625
செவ்வாய் 0.3895 3.728
வியாழன் 2.640 25.93
சனி 1.139 11.19
யுரேனஸ் 0.917 9.01
நெப்டியூன் 1.148 11.28

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=எடை&oldid=714" இலிருந்து மீள்விக்கப்பட்டது