அடிநிலை ஆற்றல்

testwiki இலிருந்து
imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 11:47, 25 சனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நீர்ம ஈலியம் இயக்க ஆற்றலைத் தக்கவைக்கிறது, மேலும் அது சுழி-நிலை ஆற்றலின் காரணமாக உறைவதில்லை. அதன் லாம்ப்டா புள்ளிக்கு கீழே குளிர்விக்கப்படும் போது, அது மீப்பாய்மப் பண்புகளை வெளிப்படுத்துகிறது.

அடிநிலை ஆற்றல் அல்லது சுழி-நிலை ஆற்றல் (Zero-point energy, ZPE) என்பது ஒரு துளிம எந்திரவியல் அமைப்பு பெறக்கூடிய மிகக்குறைந்த ஆற்றலின் அளவு; துளிம சுழிநிலை ஆற்றல் என்பது ஒரு துளிம எந்திரவியல் அமைப்பின் நிலையில் ஐசன்பர்க் நிலையின்மைத் தத்துவத்தின்படி ஏற்படும் தவிர்க்கவியலாத மாறுபாடுகளினால் உருவாகும் ஆற்றல்[1]; இது மிகவும் அடிப்படையான ஒரு துளிம நிகழ்வாகும். தனிவெப்பநிலைக் கீழ்வரம்பில், அதாவது 0 K வெப்பநிலையில், அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் பெற்றிருக்கும் ஆற்றலாகும். இந்த வெப்பநிலையில் அவைகள் இயக்கம் இன்றி இருப்பதால் அவைகளின் இயக்க ஆற்றல் சுழியமாகும்.

செய்முறை நிறுவல்

லேசர் சீரொளிக் குளிர்விப்பின் மூலம் ஒரு துளிம எந்திரவியல் அலையியற்றியை அதன் அடிநிலை ஆற்றலை அடையும்படி செய்து அதன் நிலையில் ஏற்படும் துளிம மாறுபாடுகளைக் கண்டுபிடித்துள்ளனர்; இதில் அயனிப் பிடிப்பி இயற்பியலில் உள்ள நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது[1]

துளிம சீரிசை அலையியற்றி

ஈரணு மூலக்கூறின் அலைவுகள் இரு நிறைகளை ஓர் சுருளின் மூலம் இணைத்த அமைப்பின் அலைவுகளைப் போல இருப்பினும், அதன் நிலையாற்றல் குவைய ஆற்றல் மட்டங்களாக இருக்கின்றன[2].

துளிம சீரிசை அலையியற்றியின் ஆற்றல் மட்டங்களுக்கான (En) வாய்ப்பாடு: En=ω(n+12)=(2n+1)2ω.(அல்லது) En=(n+1/2)hνஇங்கு n = 0 என்பது சுழிநிலை ஆற்றலைக் குறிக்கும்; மேலும், h என்பது பிளாங்க் மாறிலியையும் ν என்பது அதிர்வெண்ணையும் ω என்பது கோண அதிர்வெண்ணையும் குறிக்கும்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Commons

வார்ப்புரு:Authority control

  1. 1.0 1.1 Aashish Clerk (2012). Seeing the “Quantum” in Quantum Zero-Point Fluctuations. [1]
  2. வார்ப்புரு:Cite web
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=அடிநிலை_ஆற்றல்&oldid=805" இலிருந்து மீள்விக்கப்பட்டது