வீடுமன்-ஃபிரான்சு விதி

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 07:34, 20 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20221019)) #IABot (v2.0.9.2) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இயற்பியலில் வீடுமன்-ஃபிரான்சு விதி (Wiedmann-France law ) என்பது ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில், ஒரு மாழையின் (உலோகத்தின்) வெப்பக் கடத்தற் திறனும், அதன் மின்கடத்தற் திறனும் ஒரே விகிதம் கொண்டதாக இருக்கும் என்னும் விதி. ஒரு மாழையின் வெப்பக் கடத்துமையை (வெப்பக்கடத்தற் திறனை) (κ) ("கப்பா") என்றும், மின்கடத்துமையை (σ) ("ஃசிக்மா") என்றும் கொண்டால் அவற்றின் விகிதம் வெப்பநிலையாகிய (T) என்பதற்கு நேர் சார்புடையதாக இருக்கும்[1]

κσ=LT

இச்சமன்பாட்டில் L என்னும் நேர்சார்பை சமன்பாடாக ஆக்கும் மாறிலி இலாரென்சு எண் (Lorentz number) எனப்படும். அது

L=κσT=π23(kBe)2=2.44×108WΩK2.

வைடுமன்-ஃபிரான்சு விதியை குசுத்தாவ் ஐன்ரிஃகு வீடுமன் (Gustav Heinrich Wiedemann) என்பாரும் உரூடோல்ஃபு ஃபிரான்சு (Rudolph Franz) என்பாரும் 1853 இல் செய்முறைவழிக் கண்டுபிடித்த ஓர் சமன்பாடு[2]. அதாவது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அந்த விகிதம் பல மாழைகளுக்கும் ஒன்றே என்று கண்டுபிடித்தனர். ஆனால், வெப்பத்தால் மாறுபடும் தன்மையையும் அந்தச் சமன்பாட்டில் வெப்பத்தோடு தொடர்புபடுத்தும் இலாரென்சு எண்ணையும் இலூடுவிகு இலாரன்சு (Ludvig Lorenz) 1872 இல் கண்டுபிடித்தார். வெப்பத்தைக் கடத்தவும் மின்னாற்றலைக் கடத்தவும் எதிர்மின்னிகள் உதவும்கின்றன. எதிர்மின்னிகளின் ஓட்டத்தை வெப்பத்தால் அதிர்ந்தலையும் அணுக்கள் அலைக்கழிக்கின்றன (தடை ஏற்படுத்துகின்றன). எனவே வெப்பக்க்கடத்துமையும், மின் கடத்துமையும் ஒரே விகிதத்தில் இருக்கும் என்பதே அடிப்படைக் கருத்து.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்